Last Updated : 20 Nov, 2014 04:32 PM

 

Published : 20 Nov 2014 04:32 PM
Last Updated : 20 Nov 2014 04:32 PM

ஒருநாள் மேயர் ஆனது நாய்: அமெரிக்க நகரில் சுவாரசியம்

அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மேயராக 'ஃப்ரீடா' என்ற நாய் நியமிக்கப்பட்டுள்ளது.

சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் ஏ.சி.சி. என்ற விலங்குகள் பராமரிப்பு மற்றும் காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நாடு முழுவதும் உள்ள ஆதரவற்ற வீட்டு விலங்குகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஏ.சி.சி. அமைப்பு இந்த வருடம் 25-ம் ஆண்டு விழாவில் அடியெடுத்து வைத்துள்ளதை அடுத்து, இந்த வருடம் சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள இருக்கும் நாய்கள் உரிமையாளர்களிடம் நிதி திரட்டப்பட்டது.

இந்த நிலையில், சான் ஃப்ரான்சிஸ்கோவைச் சேர்ந்த டீன் க்ளார்க் என்ற வீட்டு விலங்குகள் ஆர்வலர் ஏ.சி.சி. அமைப்புக்கு தாராள நிதி வழங்கி உள்ளார். இதனால் அவருக்கு ஏ.சி.சி. அமைப்பால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே சாலை ஓரம் இருந்த ஆதரவற்ற நாய் ஒன்றை அவர் தத்தெடுத்து அதற்கு 'ஃப்ரீடா' என்று பெயர் சூட்டி ஆர்வத்துடன் வளர்த்து வருவது ஏ.சி.சி. அமைப்புக்கு தெரியவந்தது.

அது மட்டுமல்லாமல், 'ஃப்ரீடா'-வுக்கு அழகான ஆடைகளை அணிவித்தும் ஃபேஸ்புக் பிரபலமடைய செய்துள்ளார். இதுதான் செல்லப் பிராணிகள் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையிலும், டீன் க்ளார்க்கின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலும், 'ஃப்ரீடா' சான் ஃப்ரான்சிஸ்கோ நகரின் இன்றைய ஒரு நாள் மேயராக தேர்வாகி உள்ளது.

காலை முதலே 'ஃப்ரீடா'-வை புகைப்படம் எடுக்க கூட்டம் கூட்டமாக அங்கு பத்திரிகையாளர்களும் பொது மக்களும் சான்ஃப்ரான்சிஸ்கோ மேயர் அலுவலகத்துக்கு விரைந்தனர். இதனால் இன்றைய தினம் 'ஃப்ரீடா'-வுக்கான தினமாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x