Last Updated : 03 Aug, 2016 03:05 PM

 

Published : 03 Aug 2016 03:05 PM
Last Updated : 03 Aug 2016 03:05 PM

அமெரிக்க வரலாற்றில் ஒபாமாதான் மோசமான அதிபர்: டிரம்ப்

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா “தகுதியற்ற அதிபர் வேட்பாளர்” என்று விமர்சித்ததற்கு டொனால்டு டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

பிலடெல்பியாவில் நடந்த ராணுவ வீரர்களுக்கான அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்ற டிரம்ப் 2004 ஆம் ஆண்டு இராக்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க வாழ் முஸ்லிமான கிசர் கானின் மகன் ஹுமாயின் கான் மரணம் அடைந்தார். கிசர் கான் குடும்பத்தைப் பற்றி பேசும் போது டிரம்ப், “நான் மட்டும் அமெரிக்காவின் அதிபராக இருந்திருந்தால் உங்கள் குடும்பம் அமெரிக்காவில் குடியேறி இருக்காது, தங்களது மகன் அமெரிக்க ராணுவத்தில் இடப்பெற்றிருக்க முடியாது” என்று கூறினார்.

டொனால்டு டிரம்பின் இப்பேச்சுக்கு பல்வேறு தரப்புகளிடமிருந்து கண்டனம் எழுந்தது. ஹுமாயினின் பெற்றோர்கள், "டொனால்டு டிரம்பின் பேச்சு எங்ளுக்கு மனவருத்ததை ஏற்படுத்தியது, டிரம்ப் அமெரிக்க வாழ் முஸ்லிம்களை புறக்கணிக்கிறார்" என்று குற்றம் சுமத்தினர்.

இராக் போரில் மரணம் அடைந்த ராணுவ வீரரின் பெற்றோர்

இந்நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று (செவ்வாய்க் கிழமை) “வெள்ளை மாளிகையில் பணி செய்வதற்கு தகுதியற்ற அதிபர் வேட்பாளரை குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் நிறுத்தியுள்ளனர். டொனால்டு டிரம்ப் ஒரு தகுதியற்ற அதிபர் வேட்பாளர் அவருக்கு வழங்கப்பட்ட ஆதரவை குடியரசுக் கட்சி திரும்ப பெற வேண்டும். அமெரிக்க வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக டொனால்டு டிரம்பின் கருத்தை ஏற்று கொள்ள முடியாது”. என்றார்.

ஒபாமாவின் இப்பேச்சுக்கு டொனால்டு டிரம்ப் இன்று (புதன் கிழமை) பதிலடியளித்துள்ளார். அதில், ”அமெரிக்க அதிபர் வரலாற்றிலேயே மிகவும் மோசமான அதிபராக ஓமாபா இருந்துள்ளார். ஒபாமா அமெரிக்காவின் பேரழிவு, சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட சண்டைகளுக்கு ஒபாமாவே காரணம். நான் முஸ்லிம் இராணுவ வீரரை (ஹுமாயின் கான்) பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை.

நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது ஒபாமா ஏன் எதுவும் கூறவில்லை, நான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறப் போகிறேன் என்பதால்தான் ஒபாமா இவ்வாறு கூறி வருகிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x