Published : 01 May 2014 11:38 AM
Last Updated : 01 May 2014 11:38 AM

மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை: பொருளாதாரத் தடை விதித்ததால் ஆவேசம்

ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐ.நா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மேற்கு நாடுகளின் நிறுவனங்களைத்தான் பாதிக்கும். ரஷ்யாவில் எரிசக்தித்துறையில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர் கள் முக்கியக் கட்டிடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலை யில் உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யா-அமெரிக்கா இடையே பனிப்போர் மீண்டும் சூடுபிடித் துள்ளது.

ரஷ்ய துணைப்பிரதமர் உள்பட உயர்பதவிகளிலுள்ள 17 ரஷ்யர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இதனிடையே ஐ.நா.வும் கடந்த செவ்வாய்க்கிழமை பொருளா தாரத் தடைப்பட்டியலில் மேலும் 15 ரஷ்யர்களின் பெயரை அறிவித்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, உக்ரைனை அமைதியா இருக்க விட வேண்டும் என ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளார். மேலும், “நேட்டோவின் எல்லைப் பகுதியில் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

வட அட்லாண்டிக் ஒப்பந்தத் தில் (நேட்டோ) உக்ரைன் உறுப்பினராக இல்லை. இருப்பினும் அதன் மிக நெருங்கிய சில பகுதிகள் நேட்டோவுக்கு உட்பட்டவை.

இதனிடையே அமெரிக் காவுக்கு ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மின்ஸ்க் நகரில் நடந்த மாநாட்டில் அவர் பேசுகையில், “ரஷ்ய பயிற்சியாளர்களோ, சிறப்புப் படைகளோ, ராணுவமோ உக்ரைனில் இல்லை” என்றார்.

மேலும், “ரஷ்யா மீது திங்கள்கிழமை விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்துள்ள மேற்கத்திய நிறுவனங்களையே பாதிக்கும். இத்தடை தொடருமானால் அந்நிறுவனங்கள் ரஷ்யாவில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரும் எரிசக்தி நிறுவனங்கள் ரஷ்யாவில் முதலீடு செய்துள்ளன. அதிபர் புதினின் எச்சரிக்கை இந்நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x