Last Updated : 01 Oct, 2014 10:19 AM

 

Published : 01 Oct 2014 10:19 AM
Last Updated : 01 Oct 2014 10:19 AM

இந்தியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி

அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக நரேந்திர மோடி, ஐந்து நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.

முதலில், நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர், தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்தார்.

தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட மோடி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது, இந்தப்பயணம் மிகுந்த திருப்தி அளித்ததாக கூறிய பிரதமர் மோடி, "நன்றி அமெரிக்கா, ஐந்து நாட்களில் நிறைய சாதித்துள்ள மிகுந்த திருப்தியுடன் இந்தியாவுக்கு திரும்புகின்றேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x