Published : 20 Jul 2016 10:03 AM
Last Updated : 20 Jul 2016 10:03 AM

அமெரிக்காவின் நட்புநாடு இந்தியா: ட்ரம்ப் கருத்து

புவியியல், அரசியல் ரீதியாக அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா விளங்கு கிறது என்று குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடந்தது.

இதில் குடியரசு கட்சியில் தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றார். இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் அதிபர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான 4 நாள் மாநாடு ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நேற்று தொடங் கியது. உட்கட்சித் தேர்தலில் ட்ரம்ப் அதிக வாக்குகள் பெற்றாலும் கட்சி மாநாட்டில் மூத்த தலைவர்கள் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அதிபர் வேட்பாளரை மாற்ற முடியும். அதன்படி ட்ரம்பின் எதிர்ப்பாளர்கள் நேற்று அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ஆனால் அதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

முதல்நாள் மாநாட்டில் 58 பக்க தேர்தல் அறிக்கையையும் ட்ரம்ப் வெளியிட்டார். அதில் இந்தியா பற்றி கூறியிருப்பதாவது:

புவியியல், அரசியல் ரீதியாக இந்தியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக விளங்குகின்றன. நான் அதிபராக பதவியேற்றால் இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்து வேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x