ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள்

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு ஆசி​யா​வில் நில​வும் போர் பதற்றங்களுக்கு மத்​தி​யில் மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்​கா, இஸ்​ரேல், ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் நீரிணை வழி​யாக சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. இதனால், இந்​தியா உள்​ளிட்ட நாடு​களில் திர​வ​மாக்​கப்​பட்ட பெட்​ரோலிய எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.

இந்த சூழ்​நிலை​யில், இந்​திய அரசு ஈரான் அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதன் மூலம் 2 எரி​வாயு கப்​பல்​கள் இந்தியா வந்​தடைந்​தன. இந்​நிலை​யில் எரி​வாயு ஏற்றப்பட்ட மேலும் 2 இந்​தி​யக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்தி வழி​ யாகப் பயணிக்​கின்​றன. ஈரான் நாட்​டின் ஒப்​புதலுடன், அதன் கடற்​கரைக்கு மிக நெருக்​க​மான பாது​காப்​பான பாதையை இக்​கப்​பல்​கள் பின்​பற்​று​வ​தாகக் கப்பல் கண்​காணிப்​புத் தரவு​கள் தெரிவிக்​கின்​றன.

நேற்று அதி​காலை, இந்​தி​யக் கொடி​யுடன் கூடிய ‘ஜக் வசந்த்' மற்​றும் ‘பைன் காஸ்' ஆகிய இரண்டு மிகப்​பெரிய எரி​வாயு சுமந்து வரும் கப்​பல்​கள், ஐக்​கிய அரபு அமீரகக் கரையி​லிருந்து ஈரானின் கிஷ்ம் மற்​றும் லாரக் தீவு​களை நோக்கி வடக்கு திசை​யில் பயணித்​தன. தங்​களின் இலக்கை வெளிப்​படை​யாக அறி​விப்​ப​தற்​குப் பதிலாக, முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக இக்​கப்​பல்​கள் 'இந்​திய உரிமை​யாளர்' என்ற சிக்​னலை மட்​டுமே வழங்​கு​கின்​றன. இந்​தக் கப்​பல்​கள் நேற்று மாலை ஹார்​முஸ் ஜலசந்தியைக் கடந்து மறு​முனை​யான ஓமன் வளை​கு​டாவை வந்தடைந்தன.

சாதாரண காலங்​களில் ஓமன் கடற்​கரைக்கு அரு​கில் செல்லும் கப்​பல்​கள், தற்​போது ஈரானின் கடற்​கரையை ஒட்​டியே செல்​கின்​றன. இது ஈரான் விதித்​துள்ள ஒரு​வித 'போக்​கு​வரத்து கட்​டுப்​பாட்டு அமைப்​பை' உணர்த்துகிறது. ‘ஜக் வசந்த்' கப்​பல் பிப்​ர​வரி 26-ம் தேதி குவைத்​தில் எரி​வா​யுவை நிரப்​பியது. ஆனால், பிப்​ர​வரி 28-ம் தேதி போர் தொடங்​கிய​தால் அங்​கேயே சிக்கிக்கொண்டது.

அதே​போல் 'பைன் காஸ்' கப்​பல் ஐக்​கிய அரபு அமீரகத்தின் ருவைஸ் பகு​தியி​லிருந்து எரி​வா​யுவை ஏற்றிக்​கொண்டு காத்​திருந்​தது. இதுகுறித்து சென்​டோசா ஷிப் புரோக்​கர்ஸ் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் ஷிவ் சாம்​ராட் கபூர் கூறும்​போது, “ஈரான் இந்த ஜலசந்தியை ஒரு கடல்​சார் ராஜதந்​திரக் கரு​வி​யாகப் பயன்​படுத்​துகிறது.

மேற்​கத்​திய நாடு​களின் ஆதரவா அல்​லது எரிசக்தி பாது​காப்பா என்​ப​தைத் தேர்ந்​தெடுக்​கு​மாறு உலக நாடு​களை இது கட்​டாயப்​படுத்​துகிறது. இக்​கட்​டான இந்​தச் சூழலிலும் இந்​தியா தனது நடுநிலை​யைப் பேணி, எரி​வா​யுவைப் பெறு​வது அதன் ராஜதந்​திரத் திறனை நிரூபிக்​கிறது’’ என்​றார்

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த மேலும் 2 இந்திய எரிவாயு கப்பல்கள்
பாமகவும் 18 தொகுதிகளும்: அன்புமணிக்கு காத்திருக்கும் சவால்கள், சம்பவங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in