Published : 30 Jan 2014 10:24 am

Updated : 06 Jun 2017 18:56 pm

 

Published : 30 Jan 2014 10:24 AM
Last Updated : 06 Jun 2017 06:56 PM

ஈரான் மீது பொருளாதாரத் தடைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எதிர்ப்பு

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை கொண்டு வரும் மசோதாவை நாடாளுமன்றம் கொண்டு வந்தால், அதை தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்வேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கூட்டு நாடாளுமன்ற வருடாந்திரக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: “ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நமது கூட்டாளிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல் படுவோம். பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.


சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்கள் அகற்றப்பட்டதற்கு காரணம், ராஜ்ஜிய ரீதியிலான நமது நடவடிக்கைகளும், தாக்கு தல் நடத்துவோம் என்று நாம் விடுத்த எச்சரிக்கையும்தான். சர்வாதிகாரம் இல்லாத, தீவிரவாத மற்ற சூழ்நிலையை சிரியாவில் ஏற்படுத்த பாடுபடுவோம்.

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுக்க பல்வேறு நட வடிக்கைகளை எடுத்தோம். நாம் விதித்த பொருளாதாரத் தடைகளால், அந்நாடு பேச்சு வார்த்தை நடத்த முன்வந்தது. இப்போது அணு ஆயுதத் திட்டங்களை கைவிடுவது தொடர்பாக ஈரானுடன் பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக புதிய பொரு ளாதாரத் தடைகளை அமெரிக்க நாடாளுமன்றம் விதிக்கக்கூடாது. அது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற முற்பட்டால், அதிபருக்கு உள்ள ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துவிடுவேன். நாட்டின் பாதுகாப்பையும், நலனையும் கருதி தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற ஒத்து ழைக்க வேண்டும்.

ஆப்கனிலிருந்து வெளியேறுவோம் 2014-ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ் தானிலிருந்து திரும்ப அழைத்துக்கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அல் காய்தா தீவிரவாதிகளுட னான மிக நீண்ட போர் முடிவுக்கு வருகிறது. பாதுகாப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் ஆப்கன் அரசு கையெழுத்திட ஒப்புக் கொண்டால், 2014-ம் ஆண் டுக்கு பிறகு அந்நாட்டில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை நிறுத்திவைக்கப்படும். இந்த படையினர், ஆப்கன் ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்தல், தீவிரவாதிக ளுக்கு எதிரான தாக்குதல் தொடர்பாக ஆலோசனை அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். நேரடியாக தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள்.

2014-க்குப் பின் ஒருங்கி ணைந்த ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப் போம். ஆனால், ஆப்கன் மண்ணிலிருந்தபடி அமெரிக்கா மீது அல் காய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஒருபோதும் விட மாட்டோம். அதே சமயம் அமெரிக்காவுக்கு எதிரான அச்சுறுத்தல் இன் னும் குறையவில்லை. அல் காய்தாவின் முக்கிய தலைவர் களை அழித்துவிட்ட போதும், அந்த அமைப்பும், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளும் உலகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின் றன.

ஏமன், சோமாலியா, இராக், மாலி ஆகிய பகுதிகளில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை அழிக்க அந்நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். பிற நாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஆளில்லா விமானத் தாக்குதல்களை கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். அதன் விளைவுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் அதிருப்தியடைந்தால், அது நம்மை பாதிக்கும் என்பதால் தான் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளேன். வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் குடி யேற்றம் தொடர்பான சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளு மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் ஒபாமா.


ஒபாமா எதிர்ப்புஈரான்பொருளாதாரத் தடை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x