Published : 25 Dec 2013 11:04 AM
Last Updated : 25 Dec 2013 11:04 AM

அரசமைப்பு சட்ட நிர்ணய சபையில் இணைய மாவோயிஸ்டுகள் முடிவு: நேபாள நெருக்கட்டிக்குத் தீர்வு

நேபாள அரசமைப்புச்சட்ட நிர்ணய சபையில் இணைய மாவோயிஸ்டுகள் ஒப்புக்கொண்டுள்ளதன் மூலம் சில வாரங்களாக அங்கு நிலவிவந்த அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது,

அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் தாங்கள் இணைய முடிவெடுத்துள்ளோம். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை வகுக்க எங்கள் கட்சி உதவிடும் என்ற தகவலை மாவோயிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் நடந்த தேர்தல் முடிவு களை இந்த கட்சி நிராகரிப்பதாக ஆரம்பத்தில் அறிவித்தது. இந்நிலையில் தேர்தல் தில்லுமுல்லு, முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தலாம் என்கிற யோசனையை பிற கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளதால் அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் சேர்வது என்கிற முடிவை தாங்கள் எடுத்துள்ளதாக ஐக்கிய நேபாள கம்யூ னிஸ்ட் (மாவோயிஸ்டு கட்சி) நிர்வாகி நாராயண் காஜி ஸ்ரேஷ்டா தெரிவித்தார்.

அரசியல் குழப்பம்

நேபாள பொதுத்தேர்தல் நவம்பர் 19-ம் தேதி நடந்தது. இதில் மாவோயிஸ்டுகள் தோல்வி அடைந்தனர். ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி முடிவுகளை ஏற்க முடியாது என அவர்கள் பிடிவாதம் பிடிக்கவே அரசியல் குழப்பநிலை ஏற்பட்டது.

10 ஆண்டுகளாக உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவித்த நேபாளத்துக்கு இந்த தேர்தல் விடிவெள்ளியாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் மாவோயிஸ்டுகளின் நிலை குழப்பத்தை ஏற்படுத்தியது. தமது நாட்டுக்கென அரசமைப்புச் சட்டத்தை நிர்ணயம் செய்வதற்கான சபையை ஏற்படுத்த நடைபெற்ற தேர்தலில் நேபாள வாக்காளர்கள் லட்சக்கணக்கில் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

போருக்குப் பிறகு 2008ல் நடந்த தேர்தலில் பலம்மிக்க கட்சியாக மாவோ யிஸ்டுகள் உருவெடுத்தனர். ஆனால் கடந்த மாதம் 575 இடங்களுக்கு நடந்த தேர்தலில் மாவோயிஸ்டுகள் 80 இடங்களை பெற்று 3 வது இடம் பிடித்தனர்.

நேபாள காங்கிரஸும் சிபிஎன் (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி) ஆகியன முறையே முதல் 2 இடங்களைப் பிடித்தன. தேர்தல் மோசடி தொடர்பாக விசா ரணை நடத்த உத்தரவிடவேண்டும், வாக்கு எண்ணுவதை நிறுத்த வேண்டும் என்று மாவோயிஸ்டு கட்சியின் பிரசண்டா ( புஷ்ப கமல் தஹல்) கோரிக்கை வைத் திருந்தார்.

நெருக்கடிக்கு தீர்வு

இந்நிலையில், அரசமைப்புச்சட்ட நிர்ணய சபையில் இணைவது தொடர் பாக பிற கட்சிகளுடன் இணைந்து ஒப்பந்தத்தில் மாவோயிஸ்டுகள் கையெழுத்திடுவார்கள் என்றார் ஸ்ரேஷ்டா. ஒரு ஆண்டுக்குள் அரசமைப்புச் சட்ட வரைவு தயாராகும் என்றும் அவர் சொன்னார்.

மாவோயிஸ்டுகள் நடத்திய மக்கள் போராட்டம் காரணமாக 2006-ல் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி மன்னராட்சிக்கு முடிவு காணப்பட்டு நேபாளம் மதச் சார்பற்ற குடியரசாக மலர்ந்தது. அதையடுத்து கூட்டணி அரசுகள் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்தாலும் அரசமைப்புச்சட்டம் உருவாக முடியாமல் போனது. எனவே 2012ல் அரசி யல் அமைப்பு சட்ட நிர்ணய சபை கலைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x