Last Updated : 04 Jan, 2016 11:02 AM

 

Published : 04 Jan 2016 11:02 AM
Last Updated : 04 Jan 2016 11:02 AM

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

அதிகாரிகள் நலமாக இருப்பதாக தகவல்

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவ வீரர்களும் ஆப்கன் பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்திய தூதரகத் தில் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.

ஆப்கானிஸ்தானின் மஸர் இ ஷெரீப் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நேற்று முன்தினம் இரவு முதல் தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய தூதரகத்துக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. தாக்குதலில் 4-5 தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்தோ திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படையினரும், ஆப்கன் படையினரும் தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின் றனர். தீவிரவாதிகள் தூதரக அலுவலகத்துக்குள் நுழையும் முயற்சியை பலமான எதிர் தாக்குதலால் இந்திய வீரர்கள் முறியடித்தனர்.

தீவிரவாதிகளில் 2 பேர் கொல்லப் பட்டனர். மேலும் 3 தீவிர வாதிகள் இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இத்தாக்குதலில் இந்திய அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு முதல் தாக்குதல் தொடங் கியது. தூதரகத்தின் உள்பகுதியில் இந்தோ-திபெத் வீரர்களும், தூதர கத்தின் வெளிப்பகுதியில் ஆப்கன் படையினரும் சுற்றிவளைத்துள் ளனர்.

தூதரகத்தின் அருகே, அந்நி யர்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்யும்படி பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் காவல்துறை செய்தித்தொடர்பாளர் சிர் ஜன் துரானி கூறும்போது, “இப்பகுதி முழுக்க எங்கள் படையால் தடைசெய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தீவிரவாதிகளை முற்றிலும் அப்புறப்படுத்த கவனமாக செயல்பட்டு வருகிறோம்” என்றார்.

கடந்த டிசம்பர் 25-ம் தேதி ஆப்கானிஸ்தானில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சில தினங்களிலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.

மேலும் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்திய விமானப் படை தளத்துக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு, அமைதிப் பேச்சு வார்த்தையைத் தொடங்கும் பிரதமர் மோடியின் துணிச்சலான முயற்சியை சீர்குலைக்கும் விதத் தில் இந்த தாக்குதல்கள் நடத்தப் படுவதாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x