Last Updated : 30 Mar, 2017 11:40 AM

 

Published : 30 Mar 2017 11:40 AM
Last Updated : 30 Mar 2017 11:40 AM

டெக்சாஸில் பஸ் - லாரி மோதி விபத்து: 13 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தேவாலயத்துக்குச் சொந்தமான பேருந்துடன் லாரி மோதியதில் 13 பேர் பலியாகினர். இருவர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "டெக்சாஸ் மாகாணத்தின் தென் பகுதியில் புதன்கிழமை இரண்டு வழிப்பாதையுடைய நெடுஞ்சாலையில் பயணித்த தேவாலய பேருந்து ஒன்று லாரியுடன் மோதியது. இதில் 13 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். விபத்தில் பலியான அனைவரும் வயதானவர்கள் ஆவர்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தேசிய பாதுகாப்பு போக்குவரத்து வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கவர்னர் வருத்தம்:

இந்த விபத்து குறித்து டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட் கூறும்போது, "இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கள் துணை நிற்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x