Last Updated : 03 Apr, 2017 05:37 PM

 

Published : 03 Apr 2017 05:37 PM
Last Updated : 03 Apr 2017 05:37 PM

சோமாலியாவில் 11 இந்திய மாலுமிகள் கடத்தல்

சோமாலியா அருகே இந்திய சரக்கு கப்பலை மாலுமி உள்ளிட்ட 11 ஊழியர்களுடன் கடற்கொள்ளை யர்கள் கடத்திச் சென்றனர்.

இந்தக் கப்பல் துபாயில் இருந்து ஏமன் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந் தது. இந்நிலையில் சோமாலியா வின் ஹாப்யோ துறைமுகத்தில் இருந்து சுமார் 30 மைல் தொலை வில், சோமாலிய கடற்கொள்ளை யர்கள் இந்தக் கப்பலைத் தாக்கி, ஊழியர்களுடன் கடத்திச் சென்ற தாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

சோமாலியாவின் பன்ட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள ஐல் பகுதிக்கு இந்தக் கப்பல் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து கடற்போக்குவரத்து தலைமை இயக்குநர் மாலினி சங்கர் நேற்று கூறும்போது, “இது மிகப்பெரிய கப்பல் அல்ல. சிறிய பாய்மரக் கப்பல் ஆகும். கப்பலில் உள்ள சரக்குகளைக் கைப்பற்றும் நோக்கத்திலேயே இந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றதாக தெரிகிறது. அவர்கள் இதுவரை பிணையத் தொகை எதுவும் கோரவில்லை. சரக்குகள் இறக்கப்பட்ட பிறகு கப்பல் விடுவிக் கப்பட வாய்ப்புள்ளது” என்றார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு மொகாடிஷு துறைமுகம் செல்லும் வழியில் எண்ணெய் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர் களால் கடத்திச் செல்லப்பட்டது. பின்னர் எவ்வித நிபந்தனையும் இன்றி இக்கப்பல் விடுவிக்கப் பட்டது.

சோமாலிய கடற்பகுதியில் பிணையத் தொகைக்காக கப்பல் கடத்திச் செல்லப்படும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக முற்றி லும் குறைந்தன. சர்வதேச கடற் படை கண்காணிப்பு மற்றும் உள்ளூர் மீனவர்களின் ஆதரவே இதற்கு காரணம்.

இந்நிலையில் சோமாலியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் மீனவர்கள் பலர் கடற்கொள்ளையர்களாக மாறியதற்கான சூழல் தற்போதும் நிலவுவதாக கூறப்படுகிறது.

யார் இந்த கடற்கொள்ளையர்கள்?

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற னர். அங்கு 1969-ல் முகமது சையது பார் என்பவர் தலைமையிலான புரட்சிகர கவுன்சில் ஆட்சியைக் கைப்பற்றியது.

கடந்த 1980-ல் உள்நாட்டுப் போர் வெடித்தது. சோமாலி ஜனநாயக குடியரசு, பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் நடத்தின. இந்த போரால் 1991-ல் முகமது சையது பார் ஆட்சி வீழ்ந்தது.

அதன்பிறகு சோமாலியாவில் பொதுத்தேர்தல் நடைபெற வில்லை. பெயரளவுக்கு ஏதோ ஓர் ஆட்சி நடக்கிறது. தற்போதைய பிரதமர் ஹசன் அலியின் ஆட்சியில் ஊழல் தாண்டவமாடுகிறது. இது தவிர அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-சகாப், பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வரு கிறது. இதன்காரணமாக இன்றள வும் சோமாலியாவில் அமைதி திரும்பவில்லை.

உள்நாட்டுப் பாதுகாப்பு, கடல் எல்லைப் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதால் அண்டை நாட்டு மீனவர்கள் சோமாலிய எல்லை யில் அத்துமீறி மீன் பிடிக்கத் தொடங்கினர். அவர்களைத் தடுத்து நிறுத்திய உள்ளூர் மீனவர் கள், மிரட்டி பணம் பறித்தனர்.

அது லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியதால் சோமாலிய மீனவர்களின் கவனம் சரக்கு கப்பல்கள் மீது திரும்பியது. 2005 முதல் சரக்கு கப்பல்களைக் கொள்ளையடிக்க தொடங்கினர். பின்னர் கப்பலுடன் சேர்த்து ஊழியர் களைச் சிறைபிடித்து பிணைத் தொகை கேட்டு மிரட்டினர்.

தலைநகர் மொகதீஷுசு துறை முகத்தில் கடற்கொள்ளையர் களுக்கு விசுவாசமான உளவாளி கள் பலர் உள்ளனர். அவர்கள் துறைமுகத்துக்கு வந்து செல்லும் சரக்கு கப்பல்கள் வருகை குறித்து தகவல் அளிக்கின்றனர். அதன்பேரில் குறிப்பிட்ட கப்பல் களைக் கொள்ளையர்கள் மிக எளிதாக கடத்திச் செல்கின்றனர்.

பொதுவாக பிணைக்கைதி களை அவர்கள் கொலை செய்வது இல்லை. பணம் கைக்கு வந்ததும் கப்பலையும் ஊழியர்களையும் விடுவித்து விடுகின்றனர். இந்த கொள்ளையை தடுக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இணைந்து சோமாலிய கடல் பகுதியில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றன. ஆனால் அதையும் மீறி சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x