Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

செவ்வாய் கிரகத்தில் குடியேற 20 ஆயிரம் இந்தியர்கள் விண்ணப்பம்

செவ்வாய் கிரகத்தில் சென்று குடியேற 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 2 லட்சம் பேர் செவ்வாய்க்கு சென்று குடியேற முன்வந்துள்ளனர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் 2023-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்தும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் கிரகத்தில் குடியேற விண்ணப்பித்துள்ளனர்.

இதில் முதலிடத்தில் இருப்ப வர்கள் அமெரிக்கர்கள். செவ்வாய்க்கு சென்று விட விண்ணப்பித்துள்ளவர்களில் 24 சதவீதம் பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

இதற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. விண்ணப்பித்துள்ள வர்களில் 10 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

அதைத் தொடர்ந்து சீனா (6 சதவீதம்), பிரேசில் (5 சதவீதம்) பிரிட்டன், கனடா, ரஷ்யா, மெக்ஸிகோ (4 சதவீதம்), பிலிப் பின்ஸ், ஸ்பெயின், கொலம்பியா, ஆர்ஜெண்டீனா (2 சதவீதம்), ஆஸ்திரேலியா, பிரான்ஸ், துருக்கி, சிலி, உக்ரைன், பெரு, ஜெர்மனி, இத்தாலி, போலந்து (1 சதவீதம்) என மொத்தம் 140-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வர்கள் செவ்வாய் கிரகம் செல்ல விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களிடம் நேர்காணல் நடத்தியும், மருத்துவப் பரி சோதனை மேற்கொண்டும் பயணத்துக்கு தகுதியானவர்களை தேர்வுக்குழு வினர் தேர்ந்தெடுப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x