Published : 16 Feb 2014 12:00 AM
Last Updated : 16 Feb 2014 12:00 AM

அமெரிக்க தொழிற்சங்கத்தில் சேர போக்ஸ் வேகன் ஊழியர்கள் மறுப்பு

அமெரிக்காவில் செயல்படும் போக்ஸ் வேகன் ஆலை ஊழியர் கள் “யுனைடெட் ஆட்டோ வொர்க்கர்ஸ்” (யு.ஏ.டபிள்யூ.) தொழிற்சங்கத்தில் இணைய மறுத்துவிட்டனர். இது அமெரிக்கா வின் முன்னணி தொழிற்சங்கமான யு.ஏ.டபிள்யூ.வுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான போக்ஸ் வேகன், அமெரிக்காவின் டென்னிஸி மாகாணம் சாத்தன்நூகா நகரில் 2010-ல் தனது ஆலையைத் தொடங்கியது. இந்த ஆலையில் தற்போது 1338 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இங்கு தொழிற்சங்கத்தைத் தொடங்க வேண்டும் என்று யு.ஏ.டபிள்யூ. அமைப்பு வலியுறுத் தியதன்பேரில் தொழிலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. சுமார் 89 சதவீதம் பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில் பெரும்பான்மை ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைப்புதற்கு எதிராக வாக்களித்தனர்.

இந்த முடிவு யு.ஏ.டபிள்யூ. அமைப்புக்கு பெரும் பின்னடை வாகக் கருதப்படுகிறது. அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் டென்னிஸ் வில்லியம்ஸ் கூறிய போது, சில அரசியல் தலைவர் களின் தலையீட்டால் தொழிலாளர் களின் அடிப்படை உரிமை பறிக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

யு.ஏ.டபிள்யூ தொழிற்சங்கம் ஜனநாயகக் கட்சி சார்புடையதாகும். டென்னிஸி மாகாணத்தில் தற்போது குடியரசுக் கட்சி ஆட்சியில் உள்ளது. அந்தவகையில் ஆட்சியாளர்களின் தலையீடு காரணமாகவே வோல்ஸ் வேகன் ஆலை தொழிலாளர்கள், தொழிற்சங்கத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்று யு.ஏ.டபிள்யூ. குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து யு.ஏ.டபிள்யூ தலைவர் பாப் கிங் நிருபர்களிடம் பேசியபோது, குடியரசுத் கட்சியைச் சேர்ந்த செனட்டர் பாப் கார்கர் தொழிலாளர்களை மிரட்டி தொழிற்சங்கத்துக்கு எதிராக வாக்களிக்கச் செய்துள்ளார் என்றார். யு.ஏ.டபிள்யூ அமைப்பில் தற்போது 3 லட்சத்துக்கு 90 ஆயிரம் தொழிலாளர்களும் 6 லட்சம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். அமெரிக்காவின்

தென் மாகாணங்களில் போக்ஸ் வேகன் உள்ளிட்ட வெளிநாட்டு கார் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக இணைக்க யு.ஏ.டபிள்யூ தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் போக்ஸ் வேகன் ஆலைத் தொழிலாளர்களின் முடிவு, பிற ஆலைகளிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுவதால் வெளிநாட்டு கார் ஆலைகளில் யு.ஏ.டபிள்யூ. கால் ஊன்றுவது கடினம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x