Last Updated : 20 Jan, 2016 09:35 AM

 

Published : 20 Jan 2016 09:35 AM
Last Updated : 20 Jan 2016 09:35 AM

கடும் நிதி பற்றாக்குறையால் ஐ.எஸ். திணறல்: தீவிரவாதிகளின் சம்பளம் பாதியாக குறைப்பு

சிரியாவில், ஐ.எஸ். ஆதிக்கத்தில் உள்ள எண்ணெய் வயல்கள், கருவூலம் ஆகியவற்றின் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் வான் வழித் தாக்குதல்கள் நடத்தியதில் அதன் வருவாய் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தன் போராளிகளுக்கு அளித்து வந்த சம்பளத்தை பாதியாக குறைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியா மற்றும் இராக்கின் பெரும்பகுதிகளை ஆக்கிரமித்து வைத்து, உலகம் முழுவதும் தீவிரவாத தாக்குதல் சம்பவங் களை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அரங்கேற்றி வருகிறது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஐ.எஸ் ஆதிக் கத்தில் உள்ள எண்ணெய் வயல்கள், கருவூலங்கள் ஆகியவற் றின் மீது தொடர் குண்டுமழை பொழியப்பட்டது. இதனால் அதன் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து ஐ.எஸ் கருவூலத் துறை வெளியிட்ட அறிக்கையில் ‘தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிதிப் பற்றாக்குறையால் அனைவரின் சம்பளமும் பாதியாக குறைக்கப்படுகிறது. எனினும் மாதம் இருமுறை விநியோகிக்கப்படும் மளிகைப் பொருட்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை’ என ஐ.எஸ். பிறப்பித்த உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x