Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பயங்கரவாத இயக்கம்: எகிப்து அரசாங்கம்

எகிப்தில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

காவல்துறை கட்டிடத்தைக் குறி வைத்து நடத்தப்பட்ட கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை அடுத்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பயங்கரவாத இயக்கமாக எகிப்து பிரதமர் ஹஸீம் எல் பெப்லாவி அறிவித்துள்ளார்.

எகிப்தில் இடைக்கால அரசின் ஆட்சி நடக்கிறது. இதற்கு ராணுவம் உறுதுணையாக உள்ளது. எகிப்தின் சிறந்த அரசியல் இயக்கமாகக் கருதப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தற்போது கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் எகிப்து அதிபர் முகமது மோர்ஸி ராணுவப் புரட்சியால் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். ஜனநாயக ஆட்சி முறைக்குத் திரும்புவதற்காக அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மோர்ஸிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்ட 2,000க்கும் மேற்பட்ட அதன் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் முக்கிய தலைவரான முகமது பேடியும் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மோர்ஸிக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. அவர் விடுதலையாவது சந்தேகம் என்ற நிலையில் அந்த அமைப்பைத் தடை செய்யும் விதத்தில் அதனை பயங்கரவாத அமைப்பாக அரசு அறிவித்துள்ளது.

வடக்கு மன்சோரா நகரத்தில் கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு கண்டித்துள்ளது. “இத்தாக்கு தல் எகிப்து மக்களின் ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல்” என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x