Published : 01 Oct 2016 10:05 AM
Last Updated : 01 Oct 2016 10:05 AM

இந்தியா, பாக். பொறுமை காக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை அறிவுரை

இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இருநாடு களும் பொறுமை காக்க வேண்டும் என்று ஐ.நா.சபை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அதன் பொதுச்செயலாளர் பான் கி-மூன் கூறியதாவது:

இந்திய, பாகிஸ்தான் எல்லை யில் எழுந்துள்ள பதற்றம் கவலை யளிக்கிறது. எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. இந்த நேரத்தில் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். கருத்து வேறுபாடு களுக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறியதாவது: இந்திய, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த பேச்சுவார்த் தையை ஊக்குவிக்கிறோம்.

இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா நட்புறவைப் பேணி வருகிறது. இரு நாடுகளும் பதற் றத்தை தணிக்க வேண்டும். அதே நேரம் ஐ.நா.சபையில் அறிவிக் கப்பட்ட தீவிரவாத அமைப்பு களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது: இந்திய, பாகிஸ் தான் நிலவரம் குறித்து உன்னிப் பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த் தையை நடத்த வேண்டும்.

தெற்காசியாவில் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தீவிரவாதத் துக்கு எல்லைகள் கிடையாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹிலாரி கிளிண்டன் அச்சம்

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கடந்த பிப்ரவரியில் தனது கட்சியினரிடம் நடத்திய கலந்துரையாடலின் ஆடியோ பதிவு திருடப்பட்டு இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள் ளது. அந்த ஆடியோவை நியூ யார்க் டைம்ஸ் வெளியிட் டுள்ளது. அதில் ஹிலாரி கூறியிருப்பதாவது:

இந்தியாவுடனான போட்டி காரணமாக அணுஆயுதங்களைத் தயாரிப்பதில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. அந்த நாட்டில் தீவிரவாதிகள் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றும் ஆபத்து உள்ளது. இதனால் அணு ஆயுத தற்கொலைப்படை தீவிர வாதிகள் உருவெடுக்கக்கூடும்.

ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் மும்முரமாக ஈடுபடுகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு ஹிலாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x