Published : 18 Sep 2014 10:41 AM
Last Updated : 18 Sep 2014 10:41 AM

உலக மசாலா: பிங்க் ஆப்பிள்

வெளித் தோற்றத்தில் சிவப்பு, பச்சை, இளஞ்சிவப்பு வண்ண ஆப்பிள்களைப் பார்த்திருக்கிறோம். ஆப்பிளின் உள் பகுதி இளஞ்சிவப்பாக இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. வெளிப்பக்கம் மஞ்சளும் ஆரஞ்சுமாகக் காட்சி தரும் இந்த ஆப்பிள்களின் உள்ளே இளஞ்சிவப்பாக இருக்கிறது! விதவிதமான ஆப்பிள்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வில்லியம் பர்னட்டின் சமீபத்திய கண்டுபிடிப்பு இந்த பிங்க் ஆப்பிள்!

பிரெளன் நிறமாக மட்டும் மாத்திடாதீங்க பர்னட், கெட்டுப் போனால் கண்டுபிடிக்க முடியாது!

ஆழ்கடல் ஆராய்ச்சியாளரும் புகைப்படக்காரருமான வலேரி டெய்லர் மொரே ஈல் பற்றி புதிய தகவலை அளித்திருக்கிறார். சென்ற ஆண்டு கடலுக்குள் சென்றபோது ஒரு மொரே ஈல், அவரைப் பார்த்து அருகில் வந்தது. அவரைச் சுற்றிச் சுற்றி நடனமாடியது. இந்த ஆண்டும் அதே பகுதிக்குச் சென்றார் டெய்லர். அதே மொரே ஈல் அவரை நோக்கி வந்தது. நீண்ட காலம் கழித்து ஒரு நண்பரைப் பார்க்கும் ஆர்வம் அதன் உடல்மொழியில் தெரிந்தது. அருகில் வந்து நடனமாடியது. தன் அன்பை வெளிப்படுத்தியது.

’மொரே ஈல்களுக்கு மிகக் குறைவான பார்வை சக்திதான் உண்டு. ஆனால் மோப்ப சக்தி அதிகம். கைகளை வாய்க்கு அருகில் கொண்டு சென்றால், உணவு என்று நினைத்து கடித்துவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது என்று எச்சரித்தார்கள். ஆனால் இந்த ஈல் அன்பால் என்னை வசப்படுத்திவிட்டது’ என்று நெகிழ்கிறார் டெய்லர்.

ம்ம்… பிராணிகள் எல்லாம் மனுசன் கிட்ட அன்பாத்தான் இருக்குதுங்க… இந்த மனுசங்கதான்…

எங்கே பார்த்தாலும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்கள். சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஒரு மாற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் ஊஹோ நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தண்ணீர் பாக்கெட்டுகளை அப்படியே சாப்பிடலாம்!

பழுப்பு பாசிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜெலட்டின் மூலம் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஜெலட்டின் பைக்குள் தண்ணீர் இருக்கிறது. வாய்க்குள் போட்டு தண்ணீரைக் குடித்துவிட்டு, ஜெலட்டினை மென்று விழுங்கிவிட வேண்டியதுதான்! ஜெல்லி மீனைப் போல இந்தத் தண்ணீர் ஜெலட்டின் பாக்கெட்டுகள் தோற்றம் அளிக்கின்றன.

ம்ம்… லேட்டா கண்டுபிடிச்சாலும் அவசியமான கண்டுபிடிப்புதான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x