Published : 05 Sep 2018 05:27 PM
Last Updated : 05 Sep 2018 05:27 PM

சிரியா அதிபர் ஆசாத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொலை செய்யத் திட்டமிட்டாரா? புதிய புத்தகத்தின் ஆதாரங்களை ‘பொய்’ என்று மறுத்த வெள்ளை மாளிகை

பாப் வுட்வார்ட் எழுத்திய புத்தகம்  பொய் மற்றும் போலி ஆதாரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது என்று தன் மீதான விமர்சனங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவின் புலனாய்வு துறை பத்திரிகையாளரான பாப் வுட்வார்ட்  'fear: Trump in the White House' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கடந்த வருடம் கொலை செய்ய திட்டமிட்டார் என்றும் அதனை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் அதனை தடுத்துவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ட்ரம்ப் மீது பல குற்றச்சாட்டுகள் அந்த புத்தகத்தில் இடப்பெற்றுள்ளது.

இதன் காரணமாக அந்தப் புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் அந்த புத்தகம்   குறித்து வெள்ளை மாளிகை தரப்பில்,

இந்த புத்தகத்தில் கற்பனை கதைகளைவிட அதிகமாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரை பற்றி மோசமான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக  இந்த புத்தகத்தில் இவ்வாறு கூறப்பட்டூள்ளது.

இந்த புத்தகம் குறித்து ட்ரம்ப் கூறும்போது, "வுட்வார்டின் புத்தகம்  பொய் மற்றும் போலி ஆதரங்களால் ஆனது. பாதுகாப்புத் துறை அமைச்சர் எற்கனவே இந்த புத்தகத்தை நிராகரித்துவிட்டார். அந்த புத்தகத்தில் இடப்பெற்றுள்ள மேற்கொள்கள் அனைத்தும் மோசடிகளால் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x