Published : 19 Jun 2019 01:42 PM
Last Updated : 19 Jun 2019 01:42 PM

போர், மோதல் எதிரொலி: 2018-ல் சுமார் 7 கோடி பேர் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்துள்ளனர்

போர், துன்புறுத்தல், மோதல் போன்றவற்றால் கடந்த ஆண்டு மட்டுமே சுமார் 7 கோடி பேர்  உலகம் முழுவதும் இடம்பெயர்ந்து இருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனிசெஃப் கூறும்போது, ''இந்தப் புள்ளி விவரங்கள் போர், மோதல் ஆகியவற்றில் பாதிக்கப்படும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

புள்ளிவிவரத்தில் உள்ள எண்ணிக்கை கடந்த  20 ஆண்டுகளுக்கு முன்பு, பதிவு செய்யப்பட்ட அளவை விட இரு மடங்கு அதிகமாகும். புள்ளிவிவரத்தின் படி, ஒவ்வொரு நாளும் சுமார் 37,000 பேர் உலகம் முழுவதும் இடம் பெயர்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இடம் பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 25.9 மில்லியன். (அதாவது 2.5 கோடி) இது கடந்த 2017 ஆம் ஆண்டைவிட ஐந்து லட்சம் அதிகம்.

அகதிகளில் பெரும்பாலோனோர் சிரியா, ஆப்கானிஸ்தான், சூடான், மியான்மர், சோமாலியா ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறியவர்கள்.

சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக மக்கள் வெளியேறிய  நாடுகளில் சிரியா முதலிடம் வகிக்கிறது.சிரியாவிலிருந்து கடந்த ஆண்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 60 லட்சம்.இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்ளது. இங்கு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 2 லட்சம்.

கடந்த 2018 -ல் 92,400 அகதிகள் மட்டுமே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x