Published : 25 Jun 2019 12:14 PM
Last Updated : 25 Jun 2019 12:14 PM

ஜி 20 மாநாட்டில் ட்ரம்ப் சந்திக்கும் தலைவர்கள்

ஜப்பான் நடக்கும் ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் ரஷ்ய அதிபர் புதினையும் ட்ரம்ப் சந்திக்க உள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை கூறும்போது, ''ஜப்பானில் இந்த வாரம் நடைபெறும் ஜி 20 உலக  நாடுகள் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கவுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் இந்தியப் பிரதமர் மோடி, துருக்கி அதிபர் எர்டோகன், ஜப்பான் அதிபர் ஷின்சே அபே, ஆஸ்திரேலியப் பிரதமர்  ஸ்கார் மோரிசன் ஆகியோர் உள்ளனர்'' என்றார்.

ஜி 20 கூட்டத்துக்குப் பிறகு  வடகொரியா - தென்கொரியா எல்லையில் உள்ள ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ட்ரம்ப் செல்ல இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இதனை உறுதிப்படுத்தவோ, தவிர்க்கவோ அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது. இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும்  எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு இருநாடுகளிடையே தொடர்ந்து அவ்வப்போது மோதல்கள் நடந்த வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x