Last Updated : 02 Jun, 2019 03:43 PM

 

Published : 02 Jun 2019 03:43 PM
Last Updated : 02 Jun 2019 03:43 PM

வர்த்தகப் போரில் எங்களை அடிபணிய வைக்கும் ‘அழுத்த’ முயற்சிகள் எதுவும் பலனளிக்காது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ட்ரம்ப் அதிபர் ஆனது முதலே கடும் வர்த்தகப் போர் நிகழ்ந்து வருகிறது, இருவரும் மாறி மாறி பொருட்களுக்கு வரியை அதிகரித்து கடும் போட்டியில் இறங்கி வருகின்றனர். 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றும் இருதரப்பினரிடையேயும் சமாதானம் ஏற்படுவதாகத் தெரியவில்லை.

 

இந்நிலையில் தன் நிலைப்பாடு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த சீனா. ‘அமெரிக்கா கொடுக்கும் எந்த வித அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம், கொள்கைகள்தான் முக்கியம்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

தங்களுக்குப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுதான் தேவையே தவிர மிரட்டலுக்கெல்லாம் அடிபணிய முடியாது, கொள்கைகளுக்குத்தான் அங்கு பேச்சு வார்த்தை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளது.

 

இந்த வெள்ளை அறிக்கையில் சீனா கூறியிருப்பதாவது:

 

அமெரிக்க கட்டண திட்டங்களினால் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைந்து விடவில்லை. மாறாக அது அமெரிக்க பொருளாதாரத்திற்கு சீர்கேட்டைத்தான் ஏற்படுத்தியுள்ளது.

 

பேச்சுவார்த்தைகளின் போது சீனா ஒப்பந்தங்களிலிருந்து பின் வாங்கியது என்று அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது, ஆனால் சீனாவின் இறையாண்மையை தடுக்கும் விதமாக சில அழுத்தங்களை அமெரிக்கா தொடர்ந்து கொடுத்து வருகிறது. மேலும் சில கட்டணங்கள் ஒப்பந்தத்துக்குப் பிறகுதான் என்று மிரட்டும் தொனியில் கூறுகிறது.

 

அதாவது ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதை சரிபார்க்க அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது, இது எப்படி சாத்தியம்? சீனாவின் இறையாண்மை என்ன ஆவது? தொழில்நுட்ப மாற்றுக்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை காப்பு ஆகியவை குறித்த ஒப்பந்த உடன்படிக்கைகளை சீனா எப்படி அமல் படுத்துகிறது என்பதை அமெரிக்கா கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறது.

 

இதனால்தான் பேச்சுவார்த்தைகளில் தீர்வு ஏற்படுவது கடினமாகிறது.  ஒரு நாடு இன்னொரு நாட்டின் இறையாண்மையை மதிக்கவில்லை எனில், சமரசங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் எந்த ஒரு ஒப்பந்தமும் சரிபட்டு வராமல்தான்  போகும்.

 

அனைத்து வகையான தந்திரங்களையும் பயன்படுத்தி அமெரிக்கா சீனா மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகித்தால், சீனாவை சரணடைய வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமேயல்ல.

 

என்று வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சீனாவிடம் மிகப்பெரிய மண் கனிமவளங்கள் படிவுகள் உள்ளன, இவை அமெரிக்காவின் தொழில்நுட்பங்களுக்கு நிச்சயம் தேவை, சீனா இவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகா வண்ணம் தடுத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x