Published : 08 Jun 2019 01:20 PM
Last Updated : 08 Jun 2019 01:20 PM

எங்களுடன் வர்த்தக உறவை அமெரிக்கா முறித்து கொள்ளாது என நம்புகிறேன்: ஜி ஜின்பிங்

அமெரிக்க சீனா இடையே வர்த்தக போர் நீடித்து வரும் நிலையில் தங்கள் நாட்டுடன் அமெரிக்கா வர்த்தகத்தை முறித்துக் கொள்ளாது என்று நம்புவதாக அமெரிக்க திபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின்  செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற் பொருளாதார மா நாட்டில் சீன அதிபர் ஜின்பிங் நியாயமற்ற வர்த்தகப் போட்டி தற்காப்புவாதம் ஆகியவை மேற்கு உலகையும், குறிப்பாக அமெரிக்காவை  பிடித்து ஆட்டுகிறது என்று குற்றச்சாட்டினார்

மேலும், ”அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எனது நண்பர். சீனாவுடான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ளாது என்று நாம் நம்புகிறேன்” என்றும் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

பொருளாதாரா ஈகோயிஸம் மூலம் பிற நாடுகளை ஆதிக்கம் செலுத்தினால் அது முடிவற்ற மோதல்களுக்கே வழிவகுக்கும். வர்த்தகப் போர்கள், வர்த்தகப் போர்கள் மட்டுமல்ல உண்மையான போரே கூட வெடிக்கலாம்  என்று ரஷ்ய அதிபர் இதே மாநாட்டில் கூறியிருந்தார்

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ட்ரம்ப் அதிபர் ஆனது முதலே கடும் வர்த்தகப் போர் நிகழ்ந்து வருகிறது, இருவரும் மாறி மாறி பொருட்களுக்கு வரியை அதிகரித்து கடும் போட்டியில் இறங்கி வருகின்றனர். 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் முடிந்திருக்கின்றனர். எனினும் உடன்பாடும் இதுவரை எட்டப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x