Published : 07 Mar 2018 09:44 AM
Last Updated : 07 Mar 2018 09:44 AM

இஸ்ரேலுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் சவுதி வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தகவல்

இஸ்ரேலுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் சவுதி வான்வெளியைப் பயன்படுத்தலாம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித் துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பெஞ்சமின் நெதன் யாகு நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் சவுதி வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு வசதியாக ஏர் இந்தியா, சவுதி அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் இந்தியா-இஸ்ரேல் இடையேயான பயண நேரம் இரண்டரை மணி நேரம் குறையும்.

புதுடெல்லி - டெல் அவிவ் இடையேயான ஏர் இந்தியா விமானச் சேவை அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ளது. இதுவரை இஸ்ரேலுக்கு வரும் எந்த நாட்டு விமானங்களையும், சவுதி அரேபியா மீது பறப்பதற்கு அந்த அரசு அனுமதி அளித்திருக்கவில்லை. இந்த நிலையில்தான் இந்த ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.

இதனால் டெல்லி - டெல் அவிவ் இடையேயான பயண நேரம் 8 மணி நேரத்திலிருந்து ஐந்தரை மணி நேரமாக குறையவுள்ளது.

ஏர் இந்தியாவுக்கு, சவுதி வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி கிடைத்துள்ளதால், இஸ்ரேலின் தேசிய விமானச் சேவை நிறுவனமான இ1ஏ1 நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும். அந்த நிறுவனம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாதவாறு இருக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்” என்றார்.

இதுதொடர்பாக டெல்லியிலுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் கூறும்போது, “சவுதி அரேபியா வான்வெளியை பயன்படுத்துவதற்கு ஏர் இந்தியாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக எங்களுக்கு இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை ” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x