Last Updated : 19 Sep, 2014 10:55 AM

 

Published : 19 Sep 2014 10:55 AM
Last Updated : 19 Sep 2014 10:55 AM

பிரிட்டனுடன் இணைந்திருக்கவே ஸ்காட்லாந்து மக்கள் முடிவு: பொது வாக்கெடுப்பில் வரலாற்றுத் தீர்ப்பு

தனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்காட்லாந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வெளியாகத் துவங்கின. இதில், 55% வாக்குகள் ஸ்காட்லாந்து, கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனி நாடாக எதிர்ப்பு:

32 கவுன்சில்களில், 30 கவுன்சில்களில் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1,877,252 மக்கள் ஸ்காட்லாந்தில் இருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 1,512,688 மக்கள் வாக்களித்துள்ளனர்.

பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற மொத்தம் 1,852,828 வாக்குகளே தேவைப்பட்டன. 55% வாக்குகள் ஸ்காட்லாந்து, கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிரேட் பிரிட்டனின் ஓர் அங்கமாக கடந்த 307 ஆண்டுகளாக நீடித்த ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது.

ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு, அந்நாட்டிலேயே உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் உண்மையான நிலையறிய அங்கு நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் சுமார் 2,600 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 16 வயது நிரம்பியவர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். 86 சதவீத வாக்குகள் பதிவாகின.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர், ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டுமென தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'பொது வாக்கெடுப்பு முடிவு மகிழ்ச்சியளிக்கிறது'

கிரேட் பிரிட்டனில் இருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து ஸ்காட்லாந்து மக்கள் பொது வாக்கெடுப்பில் வாக்களித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவால் ஸ்காட்லாந்து மக்களின் விருப்பம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: "ஒருவேளை ஸ்காட்லாந்து மக்கள், மாற்றி முடிவு எடுத்திருந்தால்தான் மிகவும் வேதனைப்பட்டிருக்கக் கூடும்.

பொது வாக்கெடுப்பை எதிர்கொண்டது சரியான முடிவு. பொது வாக்கெடுப்பு நடத்தியதன் மூலம், ஸ்காட்லாந்து மக்களின் விருப்பம் நிறைவேறியுள்ளது" என அவர் கூறியுள்ளார்.

தப்பித்தார் கேமரூன்:

ஒருவேளை, ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருந்தால்,வரும் 2016-ம் ஆண்டு மார்ச்சுக்குப் பிறகு அந்நாடு தனி நாடாகி இருக்கும். அது பிரிட்டனின் செல்வாக்கை சர்வதேச அளவில் குறைப்பதோடு, பிரதமர் கேமரூனின் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தியிருக்கும்.

ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதைத் தடுக்க முடியவில்லை என கேமரூன் மீது இங்கிலாந்து எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.

ஆனால், எதிர்கட்சியினர் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 55% வாக்குகள் ஸ்காட்லாந்து, கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x