Published : 28 Mar 2019 02:59 PM
Last Updated : 28 Mar 2019 02:59 PM

சீனாவுக்கு எதிரான முன்னெடுப்பு: மசூத் அசார் மீது தடை விதிக்கும் தீர்மானம்- ஐ. நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பிய அமெரிக்கா

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது  தடைவிதிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு  அமெரிக்கா அனுப்பியுள்ளது.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்துடன் சேர்ந்து பிரான்ஸ் நாடும் தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால், இதுகுறித்து பரிசீலிக்க கூடுதல் அவகாசம் கோரி சீனா முட்டுக்கட்டை போட்டது.

இந்த நிலையில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது நடவடிகை எடுக்கக் கூடிய  தீர்மானத்தை நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில்லுக்கு புதன்கிழமை அமெரிக்கா அனுப்பி இருக்கிறது.

இதன் மூலம் இந்த விவகாரத்தில் சீனாவின் செயலுக்கு எதிரான முன்னோக்கு நகர்வை அமெரிக்க தற்போது வைத்திருக்கிறது.

ஐ.நா. பாது காப்பு கவுன்சிலில் சீனா தனது எதிர்ப்பை விலக்கிக் கொண்டால் போதும், இந்திய நாடாளுமன்றம், பதன்கோட், புல்வாமா தாக்குதல் களுக்கு காரணமான மசூத் அசாத்  சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவார். அவரது தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு சீனா தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

முன்னதாக மசூத் ஆசார் மீது அவரது அமைப்பின் மீது தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் தடை குழுவால் சீனாவின் எதிர்ப்புக் காரணமாக முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த  பிப்ரவரி மாதம்  புல்வாமாவில் 350 கிலோ வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை பேருந்து மீது மோதி வெடிக்கச் செய்ததில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய்ஷ்- இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x