Published : 22 Mar 2019 11:23 AM
Last Updated : 22 Mar 2019 11:23 AM

சீனாவில் ரசாயன கிடங்கில் வெடி விபத்து: 47 பேர் பலி

சீனாவில்  ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில்  47 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சினுவா வெளியிட்ட செய்தியில், “ சீனாவின் வடக்குப பகுதியில் உள்ள ஷாங்காய் நகரத்திலுள்ள யான்சென்ங்கில் ரசாயன கிடங்கு ஒன்றில் வியாழக்கிழமை மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முடியாததால்  இதில் 47 பேர் பலியாகினர். 100 அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பள்ளி செல்லும் குழந்தைகளும், சிறுவர்களும் அடக்கம். தீ வெடி விபத்தினால் அருகிலுள்ள வீடுகளில் கதவு, ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் தியாஜின் வேதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தொடர் வெடி விபத்தில் 165 பேர் பலியாகினர்.

கடந்த ஆண்டு  சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு வெளியேற்றத்தில் 23 பேர் பலியாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x