Published : 16 Feb 2019 07:09 PM
Last Updated : 16 Feb 2019 07:09 PM

பிரிட்டனில் மீண்டும் உயிர்பெற்று வரும் மிக மிக அபாயகரமான தீவிரவாத அமைப்பு அல்-முஹாஜிரூன்: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

புல்வாமாவில் நடைபெற்ற உலகை உலுக்கும் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து இஸ்லாமிக் ஸ்டேட் ஆன ஐஎஸ் என்ற அமைப்புக்கு ஆதரவு கோரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத பிரச்சாரகரின் வலைப்பின்னல் மீண்டும் எழுச்சியடைந்துள்ளது என்று பயங்கரவாத ஆய்வு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

தீவிரவாத பிரச்சாரகர் அஞ்ஜெம் சவுத்ரி பிரிட்டனில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் கடந்த அக்டோபரில் கடும் கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 51 வயதாகும் இவர் தொடங்கிய அமைப்புதான் அல்-முஹாஜிரூன் வலைப்பின்னலாகும்.

 

இந்திய வம்சாவளி ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் சித்தார்த்த தார்,  அபு ருமாய்ஷா ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் அஞ்ஜெம் சவுத்ரி.

 

இந்நிலையில் ‘ஹோப் நாட் ஹேட்’ என்ற தீவிரவாத எதிர்ப்பு குழு தன்னுடைய எச்சரிக்கையில், அல்-முஹாஜிரூன் அமைப்பு மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கடும் எச்சரிக்கையுடன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், ஆங்காங்கே அவர்கள் மீண்டும் தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

 

இது முன்பு இருந்தது போன்று வலுவாக இல்லாவிட்டாலும் அல்-முஹாஜிரூன் இன்றும் கூட மிகப்பெரிய அழிவு சக்தியாகும் ஆற்றல்களைக் கொண்டது போலவே உள்ளது, என்று எச்சரித்துள்ளது.

 

 இந்த அமைப்பு மிக மிக அபாயகரமான தீவிரவாத அமைப்பு என்று பிரிட்டன் வர்ணித்துள்ளது. 2006-ல் இதற்குத் தடை விதிக்கப்பட்டாலும் வேறு வேறு பெயர்களில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்த அமைப்பு மீண்டும் விஷப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதையடுத்து இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை லண்டன் போலீஸ் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x