Published : 19 Feb 2019 05:31 PM
Last Updated : 19 Feb 2019 05:31 PM

மீண்டும் சிரியாவில் அமெரிக்கப் படைகள்

சிரியாவிலிருந்து  படைகள் வெளியேறும் என்று கூறிய நிலையில் மீண்டும் அமெரிக்கப் படைகளை அமர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், , ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்த உள்நாட்டுப் போரில்  குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பி சண்டையிட்டது .

இந்த  நிலையில் டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம். ஐஎஸ் தீவிரவாதிகளைத் தோற்கடிக்க அனுப்பப்பட்ட அமெரிக்கப் படை வெற்றி பெற்றுவிட்டது. ஆதலால், சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் என்று  ட்ரம்ப் அறிவித்தார்.

இதற்கு பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் மீண்டும் கணிசமான அளவில் அமெரிக்கப் படைகள் சிரியாவில் இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த பேச்சு வார்த்தையில் சிரியாவில் இயங்கும் குர்து படை தளபதி, மஸ்லம் கோம்பானி அமெரிக்க அதிகாரிகளுடன்  ஈடுபட்டதாகவும், அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து ஐஎஸ்ஸுக்கு எதிராகப் போராடச் சம்மதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 1000 - 15000 வரை ராணுவ வீரர்கள் சிரியாவிலிருந்து குர்து படைக்கு ஆதரவாக ஐஎஸ்ஸுக்கு எதிராகச் சண்டையிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x