Published : 07 Feb 2019 02:04 PM
Last Updated : 07 Feb 2019 02:04 PM

பெயரில் ட்ரம்ப் இருப்பதால் கேலி, கிண்டல்களுக்கு ஆளான சிறுவன் ஜோஷ்வா ட்ரம்ப்

 

 

பெயரில் ட்ரம்ப் இருப்பதால் கேலி, கிண்டல்களுக்கு ஆளான சிறுவன் ஜோஷ்வா ட்ரம்ப், அதிபர் ட்ரம்ப் உரையாற்றிய நிகழ்வின்போது உறங்கியதால், நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.

 

வில்மிங்டனில் வசிக்கும் மேகன் ட்ரம்ப்பின் மகன் ஜோஷ்வா டிரம்ப். இந்த சிறுவன் பெயரில் ட்ரம்ப் இருப்பதால், சிறுவயதிலேயே பிரபலமாகி விட்டான். ஆனால் தனது மகனை முட்டாள், மூளையில்லாதவன் என்று அவனது நண்பர்களே கிண்டல் செய்வதாக வருத்தப்படுகின்றனர் ஜோஷ்வாவின் பெற்றோர்.

 

தனது பெயரில் ட்ரம்ப் இருப்பதால் கடும் கேலி, கிண்டலுக்கு உள்ளான ஜோஷ்வாவை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. ஒரு வருடம் வீட்டிலேயே படித்த ஜோஷ்வா, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

 

இதுகுறித்துப் பேசும் அவரி தாய் மேகன் ட்ரம்ப், ''புதிய பள்ளியில் பெயரைக் குறிவைத்துத் தாக்குதல்கள் இருக்காது என்று நம்பினோம். ஆனால் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும்பொது பேருந்து ஓட்டுநரின் பெயரைக் கேட்டார். இதனால் மிகுந்த வருத்தத்துக்கு ஆளாகினான் ஜோஷ்வா.

 

அவனுடைய பள்ளி, ஜோஷ்வாவின் கடைசிப் பெயரான ட்ரம்ப்பை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கட்டளையிட்டது. எனினும் கேலி, கிண்டல்கள் தொடர்ந்தன.

 

'என்னுடைய பெயர் பிடிக்கவில்லை என்பதால் என்னையே பிடிக்கவில்லை' என்பான் ஜோஷ்வா. பெரும்பாலான நேரம் சோகத்திலேயே இருப்பான். இது எங்களுக்கு மிகுந்த துக்கத்தை அளித்தது'' என்றார்.

 

இதனிடையே செவ்வாய்க்கிழமை அன்று 'ஸ்டேட் ஆஃப் யூனியன்' (அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும் அமெரிக்க சபையின் கூட்டு அவையில் அமெரிக்க அதிபர் உரையாற்றுவார். இதுவே ஸ்டேட் ஆஃப் யூனியன் உரை ஆகும்) உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொள்ள ஜோஷ்வா ட்ரம்ப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஜோஷ்வா ட்ரம்ப் குறித்துக் கேள்விப்பட்ட அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்நிலையில் மெலானியாவுக்கு இரண்டு இருக்கைகள் அடுத்ததாக அமர்ந்திருந்த ஜோஷ்வா, ட்ரம்ப் உரையின் இடையில் உறங்கிவிட்டார். இதனால் நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறார் ஜோஷ்வா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x