Published : 10 Sep 2014 11:28 AM
Last Updated : 10 Sep 2014 11:28 AM

சிரியாவில் அரசுக்கு எதிராகப் போரிடும் 12,000 வெளிநாட்டினர்

சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படை உள்பட பல்வேறு குழுக்களில் 12,000 வெளிநாட்டினர் உள்ளனர் என்று லண்டனைச் சேர்ந்த தீவிரவாதத் தடுப்பு நிபுணர் பீட்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

1980-ல் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. அப்போது ரஷ்யாவுக்கு எதிராக 20,000 வெளிநாட்டினர் போரிட்டனர். இப்போது சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் 74 நாடுகளைச் சேர்ந்த 12,000 வெளிநாட்டினர் பங்கேற்றுள்ளனர்.

இஸ்லாமிக் ஸ்டேட், அல்-காய்தா ஆதரவு கிளர்ச்சிப் படைகளில் சேர்ந்துள்ள அவர்கள் அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். வளைகுடா நாடுகளைத் தவித்து மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கிளர்ச்சிப் படையில் இணைந்துள்ளனர். பிரான்ஸில் இருந்து 700 பேர், பிரிட்டன்- 500 பேர், ஜெர்மனி- 400 பேர், பெல்ஜியம்- 300 பேர், அமெரிக்காவிலிருந்து 100 பேர் சிரியாவில் குடியேறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x