Published : 23 Jan 2019 12:34 PM
Last Updated : 23 Jan 2019 12:34 PM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதி

 

உருக்கு ஆலை வழக்கில் சிறை தண்டனை பெற்று, சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இதயக் கோளாறு காரணமாக லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று லாகூர் சிறையில் உள்ள ஷெரீப், இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பஞ்சாப் இதயநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவே அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

 

69 வயதான ஷெரீப்புக்கு எக்கோகார்டியோகிராபி, ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

இதுகுறித்துப் பேசிய ஷெரீப்பின் மகல் மரியம் நவாஸ், ’’என் தந்தையை மருத்துவமனைக்குச் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, என்னை வரவேண்டாம் என்று அவர் தடுத்துவிட்டார்.

 

அவரின் உடல்நிலை குறித்த விவரங்கள் இன்னும் தரப்படவில்லை. இதுகுறித்து பலமுறை சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துவிட்டோம். பஞ்சாப் உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியுள்ளோம். ஆனால் இன்னும் மருத்துவ அறிக்கை தரவில்லை’’ என்றார்.

 

அல்- அஸிஸியா உருக்கு ஆலைகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தண்டனை விதித்தது. 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அவர், கடந்த டிசம்பர் 25-ம் தேதி லாகூரில் உள்ள கோட் லாக்பாத் சிறைக்கு மாற்றப்பட்டார்.

 

3 முறை பிரதமராக இருந்த ஷெரீப், ஒருமுறை கூட தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x