Last Updated : 17 Jan, 2019 08:49 AM

 

Published : 17 Jan 2019 08:49 AM
Last Updated : 17 Jan 2019 08:49 AM

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் தீர்மானம் தோல்வி

பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான தீர்மானம் இங்கிலாந்து நாடாளு மன்றத்தில் தோல்வி அடைந்தது.

ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் தீர்மானம் மீது 2016-ல் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பிரெக்சிட் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தீர் மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறு வதற்கான நடவடிக்கைகளை வரும் மார்ச் 29-க்குள் முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிமுறை கள், நிபந்தனைகளைக் கொண்ட பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப் பட்டது. பிரதமர் தெரசா மே இதற் கான முயற்சிகள் மேற்கொண்டார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக பிரெக்சிட் ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒப்பந்தத்துக்கு எதிராக 432 எம்பிக்களும் ஆதரவாக 202 எம்பிக்களும் வாக்களித்தனர். 230 வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் மீதான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்களும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இது பிரதமர் தெரசா மேயின் வீழ்ச்சியாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x