Published : 14 Dec 2018 05:22 PM
Last Updated : 14 Dec 2018 05:22 PM

ஜெர்மனி சாலையில் ஓடிய சாக்லெட் ஆறு

ஜெர்மனியில் வெஸ்டன் நகரின் சாலை ஒன்றில் சாக்லெட் ஆறாக ஓடியதால் மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.

இதுகுறித்து ஜெர்மனி ஊடகங்கள் தரப்பில்,  “ஜெர்மனியில் வெஸ்டன்  நகரத்திலுள்ள சாக்லெட் தொழிற்சாலையில் இருந்த டேங்க் ஒன்று உடைந்ததில் அதிலிருந்த சாக்லெட்டுகள் திரவமாக சாலையில் ஓடின.

கிட்டத்தட்ட  108 சதுர அடிகள் வரை சாலையில் சாக்லெட்  ஆறாகப் பரவி ஓடியது. இதனைத் தொடர்ந்து அங்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் வெந்நீரைக் கொண்டு பல மணிநேரப் போராட்டங்களுக்குப் பின்னர் அதனை அகற்றினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாக்லெட் தொழிற்சாலையின் டேங் விழுந்ததில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து டிரிமிஸ்டர் சாக்லெட் தொழிற்சாலை கூறும்போது, ''இது தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட தவறு. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கோளாறுகள் உடனியாக சரிசெய்யப்படும்'' என்று தெரிவித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x