Published : 24 Nov 2018 09:21 AM
Last Updated : 24 Nov 2018 09:21 AM

கராச்சியில் உள்ள சீன துணைத் தூதரகத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு: தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேரும் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதகரத்தின் மீது, தற்கொலைப் படை தீவிரவாதிகள் நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸ் காரர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பாது காப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் வர்த்தக நகரமான கராச்சியில் உள்ளது ‘கிளிப்டன்’ பகுதி. இங்கு சீன துணைத் தூதரகம் உள்ளது. இங்கு நேற்று காலை 9.30 மணியளவில் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிர வாதிகள் சிலர் திடீரென புகுந்தனர். தூதர கத்துக்கு வெளியில் சோதனை சாவடியில் இருந்த போலீஸ்காரர்கள் மீது திடீரென வெடிகுண்டு வீசினர். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதன்பிறகு சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியபடியே முக்கிய நுழைவு வாயிலுக்குள் சென்றனர். இதில் அங் கிருந்த பொதுமக்களில் 2 பேர் இறந்தனர். அதற்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டு பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து பதில் தாக்குதல் நடத்தினர். சில மணி நேரம் இருதரப்புக்கும் இடையில் பயங்கரமாக துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப் பட்டனர். உடனடியாக அந்தப் பகுதி முழுவ தும் சீல் வைக்கப்பட்டது. ஏராளமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். சரியான நேரத்தில் பாதுகாப்புப் படையினரும் போலீ ஸாரும் செயல்பட்டு தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தினர். அதனால் தீவிரவாதி களால் தூதரகத்துக்குள் நுழைய முடிய வில்லை. இதன்மூலம் மிகப் பெரும் அசம்பா விதம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று பாது காப்புப் படையினர் தெரிவித்தனர்.

சீன தூதரகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் ‘இ ஸ்டிரீட்’ என்ற பகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ வசிக்கிறார். அந்தப் பகுதி முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இட மாகும். அத்துடன் பல்வேறு தூதரக அலுவ லகங்கள், உணவகங்கள், பள்ளிகள் உள் ளன. இந்தப்பகுதி ‘ரெட் ஸோன்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கராச்சி போலீஸ் தலைவர் அமீர் ஷேக் கூறியதாவது:

தற்கொலைப் படையைச் சேர்ந்த 3 தீவிர வாதிகள், தாங்கள்வந்த வாகனத்தை சீன தூதரகத்துக்கு சற்று தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள், தந்தை, மகன் என இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுட்டுக் கொல் லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 9 கையெறி குண்டுகள், கலாஸ்னிகோவ் ரக துப்பாக்கிக் குண்டுகள், வெடிமருந்துகள், உணவுப் பொருட்கள், மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய தில், சீன பாதுகாவலர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு கராச்சி போலீஸ் தலைவர் அமீர் ஷேக் கூறினார்.

பாதுகாப்பு ஆய்வாளரும், தனியார் பாதுகாப்பு ஒப்பந்ததாரருமான இக்ராம் ஷெகால் கூறும்போது, ‘‘சீன தூதரகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதும், அங்கிருந்த எங்கள் நிறுவன பாதுகாவலர்கள் உடனடியாக முக்கிய கதவை மூடிவிட்டனர். மேலும், பல்வேறு பணி நிமித்தமாக தூதரகத்துக்கு வந்திருந்த பொதுமக்களையும் தூதரக ஊழியர்களையும் உஷார்படுத்தி முக்கிய கட்டிடத்துக்குள் சென்றுவிடுமாறு எச்சரித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்’’ என்றார்.

பலுச் படை பொறுப்பேற்பு

பலுசிஸ்தான் விடுதலை படை (பிஎல்ஏ) வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், சீன ராணு வம் தனது படையை விரிவாக்கம் செய்ய முயற்சிப்பதை பொறுத்துக்கொள்ள முடி யாது’’ என்று தெரிவித்துள்ளது.

பிரதமர் இம்ரான் கான் கண்டனம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில், கராச்சியில் உள்ள சீனதுணைத் தூதரகத்தின் மீதும், ஓரக்சாய் மாவட்டம் கலயா பகுதியில் உள்ள மார்க்கெட்டிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டித்தக்கது என்று கூறியுள்ளார்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவு, துறையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x