Last Updated : 21 Oct, 2018 07:40 PM

 

Published : 21 Oct 2018 07:40 PM
Last Updated : 21 Oct 2018 07:40 PM

சந்திரனிலிருந்து விழுந்த அரிதான விண்கல்: 6 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போனது

மிகவும் அரிதான சந்திரனிலிருந்து விழுந்த 5.5 கிலோ எடையுள்ள விண்கல் அமெரிக்காவில் உள்ள ஆர்.ஆர் ஏலத்தில் 612,500 டாலர்களுக்கு ஏலம் போனது.

இந்த விண்கல் NWA 11789 என்று வகைப்படுத்தப்பட்டது. இதற்கு புவாக்பா (Buagaba) அல்லது ‘நிலவுப்புதிர்’ (The Moon Puzzle) என்று பெயர்.

கடந்த ஆண்டுதான் இது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரனிலிருந்து நெடுங்காலத்துக்கு முன் இது இன்னொரு விண்கல் தாக்கத்தினால் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதன் பிறகு அது கால்மில்லியன் மைல்கள் பிரயாணித்து பூமியை நோக்கி வந்து, வடமேற்கு ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் விழுந்தது. அங்குதான் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது 6 பகுதிகளைக் கொண்ட விண்கல்லாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x