Published : 10 Oct 2018 09:31 AM
Last Updated : 10 Oct 2018 09:31 AM

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இத்தாலியும் வெளியேறுமோ?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற குரல்கள் இத்தாலியில் அதிகரித்துவருகின்றன. காரணம், நாட்டைச் சூழ்ந்திருக்கும் பெரும் பொருளாதாரக் கொந்தளிப்பு. இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி இன்று 1%-க்கும் குறைவு. வணிகத்தில் ஏற்றுமதி குறைவு - இறக்குமதி அதிகம் என்ற நிலை வேலையில்லாத் திண்டாட்டத்தை உச்சம் கொண்டுசென்றிருக்கிறது. பொதுச் செலாவணியான யூரோ மீது அதிருப்தி இருப்பதாலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் பிடிக்காததாலும் அதிலிருந்து வெளியேறி, பழையபடி தங்களுக்கென்று தனி செலாவணியைப் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன. கடந்த மார்ச்சில் பதவியேற்ற கூட்டணி அரசானது சமூக நலத் திட்டங்களுக்கும் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளுக்கும் அதிக நிதியைச் செலவிட விரும்புகிறது. அதைக் கடன் பத்திர வெளியீட்டு மூலம் திரட்டவும் முனைகிறது. ஆனால், அரசு கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டினாலும் உரிய காலத்தில் அசலையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த முடியாமல்போனால் நாடே திவாலானதுபோலாகிவிடும். அரசு போண்டியானால் வங்கிகளும் மூழ்கிவிடும். கிரேக்கம் அளவுக்கு மோசம் இல்லையென்றாலும், இத்தாலியின் பொருளாதாரச் சீர்கேடு பிற ஐரோப்பிய நாடுகளையும் பதம் பார்த்துவிடும் என்ற அச்சமும் ஐரோப்பா முழுவதும் ஏற்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x