Published : 10 Aug 2018 08:46 AM
Last Updated : 10 Aug 2018 08:46 AM

உலக மசாலா: வரலாற்றை மாற்றியமைத்த பெண்கள்

வரலாற்றை மாற்றியமைத்த செல்வாக்கு மிக்கப் பெண்களைத் தேர்வு செய் வதற்கான வாக்கெடுப்பை, வரலாற்று இதழுக்காக நடத்தியது பிபிசி. இதில் அரசியல், அறிவியல், விளை யாட்டு, தொழில்நுட்பம், இலக்கியம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றுள் ளனர். முதல் 5 இடங்களைப் பிடித்த பெண்கள், ஒப் பீட்டளவில் அதிகம் பிரபல மானவர்கள் அல்ல. இதுவரை பிரபலமானவர்களாகக் கருதப்பட்டவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் இடத்தைப் பிடித்திருக் கிறார் விஞ்ஞானி மேரி க்யூரி! போலந்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர்.

10 வயதில் தாயை இழந்தார். உயர் கல்வி படிக்க வசதி இல்லாததால், 6 ஆண்டுகள் வசதியான குடும்பங்களில் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் வேலையைச் செய்து, தன்னுடைய சகோதரியைப் படிக்க வைத்தார். பிறகு சகோதரி வேலைக்குச் சென்று மேரியைப் படிக்க வைத்தார். குளிருக்குப் போர்த்திக்கொள்ள கம்பளிக் கூடக் கிடையாது. சத்தான ஆகாரம் இல்லாததால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டிருந்த மேரி, இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். கணவர் பியரி க்யூரியுடன் சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். யுரேனியம், பொலோனியம் என்ற இரு தனிமங்களைக் கண்டுபிடித்தார். இயற்பியலிலும் வேதியியலிலும் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றார்.

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்ணும் இரண்டு நோபல் பரிசுகளை வென்ற முதல் மனிதரும் இவரே. புற்றுநோயைக் குணப்படுத்துவதற்காக கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டார். முதல் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்குச் சிகிச்சை அளித்தார். போரில் காயம்பட்டவர்களுக்கான நிதிக்காகத் தன்னுடைய நோபல் பரிசுகளை நன்கொடையாக வழங்கினார். ‘மனிதர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, பரிசுகளை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்று கேட்டார். நீண்ட கால கதிரியக்க ஆராய்ச்சியின் விளைவாக ஏற்பட்ட ரத்தப் புற்று நோயால், 66 வயதில் மரணத்தைச் சந்தித்தார். இத்தகையச் சிறப்புகளைப் பெற்ற மேரி க்யூரியை முதல் இடத்தில் தேர்ந்தெடுத்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பேருந்தில் அமர்ந்திருந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ரோசா பார்க்ஸை, இருக்கையில் இருந்து எழச் சொன்ன அமெரிக்கரை எதிர்த்து நீண்ட நெடியப் போராட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளைப் பெறக் காரணமாக அமைந்த ரோசா பார்க்ஸ், இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த எம்மலின் பான்க்ருஸ்ட். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கேட்டுப் போராடி, இறுதியில் உரிமையை வென்றெடுத்த முதல் பெண்.

இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களான, கணினி நிரல்களை உருவாக்கிய கணிதவியலாளர் அடா லவ்லேஸும் விஞ்ஞானி ரோசலின்ட் ஃபிரான்க்ளினும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கின்றனர். மார்கரெட் தாட்சர், விக்டோரியா ராணி, ஜேன் ஆஸ்டின், இளவரசி டயானாவும் முதல் இருபது இடங்களில் இருக்கிறார்கள். அல்பேனியாவில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்த அன்னை தெரசா இருபதாவது இடத்தைப் பெற்றிருக்கிறார்.

வரலாற்றை மாற்றியமைத்த பெண்களுக்குப் பூங்கொத்து!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x