Last Updated : 26 Aug, 2018 09:05 AM

 

Published : 26 Aug 2018 09:05 AM
Last Updated : 26 Aug 2018 09:05 AM

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்மாதிரியான அரசியல்வாதி: ஐநா சபை பொதுச் செயலர் புகழாரம்

இந்தியாவின் முன்னாள் பிரத மர் அடல்பிகாரி வாஜ்பாய் முன் மாதிரியான அரசியல்வாதியாக திகழ்ந்தவர் என்று ஐக்கிய நாடு கள் சபை பொதுச் செயலர் அந்தோ னியா குத்தேரஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நியூயார்க்கில் ஐ.நா. சபை சார்பில் அண்மையில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் வாஜ்பாயை தான் சந்தித்த நிகழ்ச்சியை குத்தேரஸ் நினைவு கூர்ந்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: வாஜ்பாய், அனைவருக்கும் முன் மாதிரியான அரசியல்வாதியாக வும், தலைவராகவும் திகழ்ந்தார். இந்தியாவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் அமைதி, வளர்ச்சி ஏற்பட சுயநலமின்றி பாடுபட்டவர் அவர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பெரு, இஸ்ரேல், நைஜீரியா, பாலஸ் தீனம், சுவிட்சர்லாந்து, பாகிஸ் தான், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர், பிரதிநிதிகள் கலந்துகொண்டு அங்கு வைக்கப் பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். இந்தத் தகவலை ஐ.நா பொதுச் செயலருக்கான செயலர் அதுல் காரே தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவு மேம்படுவதற்கு வாஜ்பாய் பெருமளவில் பாடு பட்டார் என்றும் சார்க் நாடு களிடையே பிராந்திய ஒத்துழைப்பு ஏற்படவும், வளர்ச்சி ஏற்படவும் முக்கிய ஆதரவாளராக இருந்தார் என்றும் பாகிஸ்தான் பிரதிநிதி, அந்த புத்தகத்தில் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்கா வுக்கான இந்திய தூதர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கான இரங்கல் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் இந்திய, அமெரிக்க அதிகாரி கள், தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x