Published : 23 Jul 2018 12:44 PM
Last Updated : 23 Jul 2018 12:44 PM

சிரியாவிலிருந்து ஒயிட் ஹெல்மெட் தன்னர்வலர்களை மீட்ட இஸ்ரேல்

சிரியாவில் போர் நடக்கும் ஆபத்தான பகுதிகளில் சிக்கிக் கொண்டிருந்த ஒயிட் ஹெல்மெட் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்களையும், அவர்களது குடும்பத்தினரையும்  இஸ்ரேல் அரசு மீட்டுள்ளது.

சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் தரைமட்டமான கட்டடங்களில் அகப்பட்டு கிடக்கும் சிரியா மக்களை மருத்துவமனைகளில் சேர்க்கும் பணியை சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014 ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது  ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு.

ஜேம்ஸ் லி மெசுரியர் நிறுவிய இந்த அமைப்பில் சுமார் 3000 தன்னார்வலர்கள் உள்ளனர். இவற்றில் பெண் தன்னார்வலர்களும் அடக்கம். போர்க்களத்தில் தங்கள் சந்திக்கும் உணர்வுப்பூர்வ தருணங்களை The White Helmets என்ற ட்விட்டர் என்ற பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் சிரியாவில் தென் பகுதியில் கடுமையான வான்வழித் தாக்குதல் நடக்கும் பகுதியில் சிக்கிக் கொண்ட ஒயிட் ஹெல்மேட்ஸ் அமைப்பைச் சேர்ந்த  தன்னார்வலர்களையும் அவர்களது குடும்பங்களையும் மீட்கும்படி இஸ்ரேல் நாட்டுக்கு பிரிட்டன் போன்ற நாடுகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்த நிலையில் சிரியாவின் தென் பகுதிகளிலிருந்து ஒயிட் ஹெல்மேட் அமைப்பைச் சேர்ந்த சுமார் 420 தன்னர்வாலர்களை இதுவரை இஸ்ரேல் மீட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீவிரவாதிகளாக குறிவைக்கப்படும் ஒயிட் ஹெல்மெட்

சிரிய அதிபர் பஷாரும் ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பினரைத் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு வருகிறார். இதனால் அந்த அமைப்பின் மீது சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ள  நிலையில் இந்தக் குற்றச்சாட்டை ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

சிரிய உள்நாட்டுப் போரை பொறுத்தவரை ஒயிட் ஹெல்மேட்ஸ் அமைப்பினர் இரண்டு முக்கிய பங்களிப்பை செய்து வருகிறார்கள். ஒன்று மக்களை மீட்டு காயமடைந்த மக்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பது.

இரண்டாவது தங்களது தலைக்கவசத்தில் அணிந்துள்ள மைக்ரோ கேமிராக்கள் மூலம் உள் நாட்டுப் போரினால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை வீடியோவாக  சமூகவலைத்தள பக்கங்களில் பதிவேற்றி, உலக மக்கள் கண் முன் நிறுத்துகிறார்கள்.  இதன் காரணமாக ரஷ்யாவாலும், சிரிய அதிபர் ஆசாத்தாலும் ஒயிட் ஹெல்மெட் அமைப்பினர்  குறிவைக்கப்படுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x