Published : 30 Aug 2014 09:36 AM
Last Updated : 30 Aug 2014 09:36 AM

பாகிஸ்தான் அரசியல் நெருக்கடி சமரச முயற்சியில் ராணுவ தளபதி: மீண்டும் ராணுவ ஆட்சி?

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிரான போராட்டத்தால் அரசியல் சிக்கல் முற்றி வரும் நிலையில் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் சமரச முயற்சியில் இறங்கியுள்ளார்.

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான், மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி ஆகியோரிடம் பேச்சு நடத்தியுள்ள ரஹீல் ஷெரீப், அடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ராணுவம்?

சமரச முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு ஷெரீப் பிரதமராக இருந்தபோது அவரை கவிழ்த்து விட்டு ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை ஏற்படுத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

போராட்டத்துக்கு காரணம்

பிரதமர் ஷெரீப் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றிபெற் றுள்ளார். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று இம்ரான் கான், தாஹிர் உல் காத்ரி ஆகியோர் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட் டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளனர். நாடாளு மன்றத்தையும் அவர்கள் முற்றுகை யிட்டுள்ளனர். இதனால் நவாஸ் தலைமையிலான அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. எதிர்ப்பாளர்களுடன் அரசு தரப்பினர் பல கட்ட பேச்சு நடத்தியும் பிரச்சினைக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி ராணுவம் களமிறங்கியுள்ளது.

தளபதியை அழைக்கவில்லை நவாஸ் மறுப்பு

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மேற்கொள்ள ராணுவ தளபதியின் உதவியை நாடியதாக வெளியான செய்தியை நவாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x