Published : 29 May 2018 06:55 AM
Last Updated : 29 May 2018 06:55 AM

ட்ரம்ப் - கிம் பேச்சுவார்த்தையில் தென்கொரிய அதிபர் பங்கேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்கிறார்.

அதிபர் கிம்முடனான சிங்கப்பூர் சந்திப்பை ரத்து செய்வதாக அதிபர் ட்ரம்ப் அண்மையில் தன்னிச்சையாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் பொறுமையை கடைப்பிடித்த அதிபர் கிம், எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று பதிலளித்தார். இதனால் மனம் மாறிய ட்ரம்ப், சிங்கப்பூர் சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

ட்ரம்ப், கிம் சந்திப்பு தொடர்பாக அமெரிக்க, வடகொரிய வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே சிங்கப்பூரில் முகாமிட்டு முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அதிபர் ட்ரம்ப் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அமெரிக்க குழுவினர் வடகொரியா சென்றுள்ளனர். வரும் காலத்தில் வடகொரியா மிகச்சிறந்த பொருளாதார நாடாக உருவெடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் தென்கொரிய வெளியுறவு துறை மூத்த அதிகாரி சியோங் வா டே நேற்று கூறியபோது, “ட்ரம்ப், கிம் சந்திப்பின்போது தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு 3 தலைவர்களும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x