Published : 23 Apr 2018 07:48 AM
Last Updated : 23 Apr 2018 07:48 AM

கடந்த 2017-ம் ஆண்டு முழுவதும் இலங்கையில் சட்டவிரோதமாக கைது; சித்ரவதை, மனித உரிமை மறுப்பு: அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை

இலங்கையில் 2017-ம் ஆண்டில் மனித உரிமைகள் நிலவரம் குறித்த அறிக்கையை, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் 2017-ம் ஆண்டு அரசு அல்லது அதன் அமைப்புகளால் சட்டவிரோதமான கொலைகள் நடந்துள்ளன. நாடு முழுவதும் கைதிகள் சித்ரவதை நீடித்துள்ளது. சிறையில் சித்ரவதை, தகாத முறையில் நடத்தப்பட்டது, வாக்குமூலம் தரச் சொல்லி கட்டாயப்படுத்தியது, மனித உரிமைகள் மறுக்கப்பட்டது போன்ற புகார்களை கைதிகள் கூறியுள்ளனர்.

காணாமல்போன தங்களது கணவன்மார்களைப் பற்றி விசாரிக்க வந்த பெண்களை, ராணுவத்தில் பணியாற்றி மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கான அரசு உதவிகளைப் பெற வந்த விதவைகளை அரசு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி கேட்டபோது கைது செய்யப்பட்டதை வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க இலங்கை அரசு மிகக் குறைந்த அளவிலேயே நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், 2016-ம் ஆண்டை விட 2017-ல் தன்னிச்சையாக கைது, சிறை யில் அடைத்தல் குறைந்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x