Published : 25 Apr 2018 03:15 PM
Last Updated : 25 Apr 2018 03:15 PM

ஈரானுக்கு எதிராக புதிய அணு ஆயுத ஒப்பந்தம்: அமெரிக்கா, பிரான்ஸ் திட்டம்

ஈரானுக்கு எதிராக புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா அதிபர் ட்ரம்பும், பிரான்ஸ் அதிபர் மக்ரோனும் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், "பிரான்ஸ் அதிபர் மக்ரோன், ட்ரம்ப் உடனான சந்திப்பில் ஈரான் தனது அணுஆயுத சோதனைகள் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் கூறும்போது, ’’ஈரானுடனான் ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது. அது ஒரு மோசமான சிதைவுகளுடன் கூடிய ஒப்பந்தம்” என்று விமர்சித்தார்.

மேலும், ஈரானுடனான ஒப்பந்தத்தை  ரத்து செய்து புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ட்ரம்பும், மக்ரோனும் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றது முதல், “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று வருகிறார். இதற்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோனும் ஆதரவு அளித்து வருகிறார். இந்த நிலையில் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x