Last Updated : 27 Apr, 2018 07:00 PM

 

Published : 27 Apr 2018 07:00 PM
Last Updated : 27 Apr 2018 07:00 PM

‘கர்நாடகத் தேர்தலில் வாக்களிப்பீர்களா? : விஜய் மல்லையா பளீர் பதில்

கர்நாடகத் தேர்தலில் வாக்களிப்பீர்களா என்று லண்டனில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு விஜய் மல்லையா பதில் அளித்துள்ளார்.

தொழிலதிபர் விஜய்மல்லையா தனது கிங்பிஷர் நிறுவனத்துக்காக வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டுவருகிறது. இதற்காக சிபிஐ தரப்பில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

வெஸ்ட்மினிஸ்ட்டர் நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணைக்குத் தொழிலதிபர் விஜய் மல்லையா, அவரின் வழக்கறிஞர்கள் வந்து நேரில் ஆஜராகினார்கள். விசாரணை முடிந்து அவர்கள் வெளியேவந்தபோது விஜய் மல்லையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவரிடம் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறதே அதில் வாக்களிப்பீர்களா என்று கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில், கர்நாடக எனது சொந்தமாநிலம் அதில் நடக்கும் தேர்தலில் நான் வாக்களிப்பது எனது ஜனநாயகக் கடமை. உங்களுக்குத் தெரியும், நான் இங்கிலாந்தில் இருந்து அங்கு வந்து வாக்களிக்க முடியாது என்றார்.

கர்நாடகத் தேர்தலில் வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்று நிருபர்கள் கேட்டபோது, அதற்கு மல்லையா அளித்த பதிலில், நான் கர்நாடக அரசியலைத் தொடர்ந்து கவனித்து வரவில்லை. ஆதலால், அங்கு நடக்கிறது என்பது எனக்கு தெரியாது எனத் தெரிவித்தார்.

விஜய் மல்லையா கடந்த 2002 ஏப்ரல் 10 முதல் 2008-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதிவரை மாநிலங்கள் அவை எம்.பி.யாக கர்நாடக சார்பில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால், லண்டன் சென்றபின் அந்த எம்.பி.பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x