Published : 16 Aug 2014 05:30 PM
Last Updated : 16 Aug 2014 05:30 PM

நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது குடல் பாக்டீரியா

நாம் உடல் பருமன் குறித்து அதிகம் கவலைப்படுகிறோம். இதனால் சதைபோடும் உணவுகளை எடுக்கக் கூடாது என்று நாம் உறுதியாக இருந்தாலும் தவிர்க்க முடியாமல் அவற்றை சாப்பிடுகிறோம் இது ஏன் என்று பலருக்கு வியப்பாகவே இருக்கும்.

இதற்கான காரணம் என்னவென்று அமெரிக்க ஆய்வு ஒன்று ஆராய்ந்துள்ளது.

குடல் பாக்டீரியாக்களைக் கொண்டு உடல் பருமன் நோயைக் குணப்படுத்தலாம் என்’று சில ஆய்வுகள் தெரிவிக்கையில், இந்த ஆய்வு அதற்கு மாறான ஒரு முடிவைக் கண்டடைந்துள்ளது.

அதாவது நம் குடலில் வாழும் பாக்டீரியா மூளையின் செயல்பாட்டை தனக்குச் சாதகமாகத் தூண்டி விடுகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து கண்டுபிடித்திருப்பதாவது:

நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவை குடல் பாக்டீரியா ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அது மூளையில் செயல்பாட்டை வேறுவிதமாக மாற்றி அது மேலும் வளர்ச்சியடைய உதவும் உணவுப்பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளுமாறு தூண்டுகிறது.

நம் உடலில் பல்வேறு நலன்களுக்காக பாக்டீரியா சமூகம் வாழ்ந்து வருகிறது. இதுதான் உணவு எடுத்துக் கொள்ளும் நமது தெரிவை தீர்மானிக்கிறது.

குடல் என்பது நம் உடலின் எதிர்ப்புச் சக்திக் கூறுகளுடனும், நரம்பியல் அமைப்புடனும், நாளமில்லா சுரப்பிகளுடனும் தொடர்புடையது. இந்த நிலையில் பாக்டீரியா சமூகம் மூளைக்கு தங்கள் இருப்பிற்கான சமிக்ஞைகளை அனுப்புகிறது. இதுதான் நமது உணவு மற்றும் பிற நடத்தை குணாதிசியங்களைத் தீர்மானிக்கிறது.

உடலின் சீரணப்பாதையிலிருந்து மூளையின் அடிப்படை அமைப்புகளுக்கு இந்த பாக்டீரியாக்கள் 100மில்லியன் நரம்புச் செல்களை இணைக்கும் முக்கியமான நரம்பிழை மூலம் செய்திகளை அனுப்புகிறது. இதுதான் நமது உணவுப்பழக்கவழக்கத்தையும், நடத்தையையும் தீர்மானிக்கிறது.

ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு உடல் பருமன் என்ற ஒரு தீராத பிரச்சினையைத் தீர்க்க வழிவகை செய்வதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. ஆகவே எது நமது சுதந்திரத் தெரிவு என்று நினைத்திருக்கிறோமோ அது நம் சுதந்திரத் தெரிவு அல்ல.

ஆனாலும் உடலில் இயங்கும் இத்தகைய சக்திகளின் தீமையான செயல்பாடுகளை மாற்றி அமைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x