Published : 19 Apr 2018 10:02 AM
Last Updated : 19 Apr 2018 10:02 AM

உலக மசாலா: தன்னம்பிக்கை சாம்பியன்

சீ

னாவின் ஹார்பின் பகுதியைச் சேர்ந்த 22 வயது ஸாங் ஷுவாய் அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தார். ஆறே மாதங்களில் எடையைக் குறைத்ததோடு, பாடிபில்டிங் சாம்பியனாகவும் மாறியிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் இவர் சிறந்த கூடைப்பந்து வீரராக திகழ்ந்தார். திடீரென மிக மோசமான காயம் ஏற்பட்டது. அவரால் விளையாட முடியாமல் போனது. மன அழுத்தத்துக்கும் ஆளானார். அதிகமாக சாப்பிட்டார். 40 கிலோ எடை கூடியது. இதனால் பல விதங்களில் கஷ்டப்பட்டார். உடல் தேறியதால் 6 மாதங்களுக்கு முன்பு எடை குறைக்க முடிவெடுத்தார். மீண்டும் உடற்பயிற்சிகளை ஆரம்பித்தார். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டார். 30 கிலோ எடையைக் குறைத்தவுடன் கிட்டத்தட்ட பழைய உடல்நிலைக்குச் சென்றார். அப்போது தான் பாடிபில்டிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. லட்சியத்துடன் உழைத்தார். அவர் எதிர்பார்த்ததைவிட உடல் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தது. நம்பிக்கையுடன் போட்டியில் கலந்துகொண்டார். சாம்பியன் பட்டத்தையும் வென்றார். எடையைக் குறைத்து ஆறே மாதங்களில் ஸாங் இதைச் செய்தார் என்பதுதான் ஆச்சரியமானது. “விபத்து நிகழ்ந்தபோது நான் மனதளவிலும் உடல் அளவிலும் மிகவும் துவண்டு போனேன். கண்டதையும் சாப்பிட்டேன். உடல் எடை கூடியது. ஒரு கட்டத்தில் அதன் கஷ்டத்தை உணர ஆரம்பித்தேன். நான் இனி அவ்வளவுதானா என்ற பயம் வந்தது. நல்லவேளை, என் உடல் பூரணமாகக் குணமடைந்தது. சட்டென்று மன உறுதியுடன் உடல் எடையைக் குறைத்ததோடு, பாடிபில்டிங்கிலும் சாம்பியன் ஆகிவிட்டேன்” என்கிறார் ஸாங் ஷுவாய்.

தன்னம்பிக்கைக்கு வாழ்த்துகள்!

மொ

ராகோவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், சமீபத்தில் மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டார். அதில் அவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என்பது தெரியவந்தது. அதிர்ந்து போனார். திருமணமாகி 35 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறார். இதில் 9 குழந்தைகள் அவருக்கு பிறந்திருக்கின்றனர். மருத்துவரிடம் குழந்தைகள் இருப்பதைச் சொன்னார். உடனே மேலும் சில மருத்துவப் பரிசோதனைகளைச் செய்தார் மருத்துவர். அனைத்துப் பரிசோதனை முடிவுகளிலும் இவருக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்துவிட்டது. வேறு ஓர் இடத்திலும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, முடிவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தார். அதிலும் அதே முடிவு வந்தவுடன் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்துவிட்டார். நீதிமன்றம் மனைவியின் தரப்பையும் தீர விசாரித்து, இன்னொரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு தீர்ப்பு வழங்கும். ஒருவேளை குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், மொராகோ சட்டப்படி கடுமையான தண்டனை மனைவிக்கு வழங்கப்படும். பேராசிரியருக்கு 9 குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் இல்லாமல் போய்விடும்.

தீர விசாரிப்பதே மெய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x