Last Updated : 20 Feb, 2018 04:12 PM

 

Published : 20 Feb 2018 04:12 PM
Last Updated : 20 Feb 2018 04:12 PM

அமெரிக்காவின் மோசமான அதிபர் டிரம்ப்: சிறந்தவர் ஆபிரஹாம் லிங்கன்: கருத்துக்கணிப்பில் முடிவு

அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக ஆபிரகாம் லிங்கனையும், செயல்பாட்டில் மிகமோசமாக கடைசி இடத்தில் தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப்பையும் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கருத்துக்கணிப்பில் தேர்வு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழ பேராசிரியர் பிரண்டன் ரோட்டிங்காஸ், போய்ஸ் ஸ்டேட் பல்கலையின் பேராசிரியர் ஜஸ்டின் வாகன், ஆகியோர் இணைந்து, அமெரிக்காவின் சிறந்த அதிபர்கள், அரசியல் தலைவர்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தினர்.

இதற்காக, அமெரிக்க அரசியலில் தற்போது பதவியில் இருக்கும் உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், உயர் அரசியல் பதவியில் இருப்பவர்கள் உள்ளிட்ட 170 பேரிடம் கருத்துக்கள் கேட்டனர். இவர்கள் அளித்த வாக்குகளின்படி, முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளில் 57 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும், 13சதவீதம் குடியரசுக்கட்சியைச்ச சேர்ந்தவர்களும், 27சதவீதம் சுயேட்சை அரசியல்வாதிகளும்ஆவர்.

இதில் அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக ஆபிரஹாம் லிங்கனை அந்நாட்டு அரசியல்வாதிகள் தேர்வு செய்துள்ளனர், அதேசமயம், செயல்பாட்டில் மிக மோசமான அதிபராகவும், கடைசி இடத்திலும் பெரும்பாலோர் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை தேர்வு செய்தனர்.

ஒவ்வொரு அதிபர்களுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அரசியல்வாதிகள் வாக்களித்தனர்.அதன்படி ஆபிரஹாம் லிங்கனுக்கு பெரும்பாலானோர் 90 முதல் 100 மதிப்பெண்கள் வரை அளித்து, அவரின் எந்த செயலையும் விமர்சிக்காமல் இருந்தனர்.

அதேசமயம், சராசரியாக செயல்பட்ட அதிபர்களுக்கு 50 மதிப்பெண்களும், மோசமான செயல்பட்டவர்களுக்கு விமர்சனத்தையும், மதிப்பெண்கள் அளிக்காமல் இருந்தனர்.

இந்த ஆய்வி்ல் மிகச்சிறந்த அதிபராக இன்னும் அந்நாட்டு மக்கள் ஆபிரஹாம் லிங்கனை கருதுகின்றனர். அவருக்கே முதலிடத்தை அளித்துள்ளனர். 2-வதாக ஜார்ஜ் வாஷிங்டன், 3-வதாக பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், 4-வதாக தியோடர் ரூஸ்வெல்ட், 5-வதாக தாமஸ் ஜெபர்சன், 6-வதாக ஹேரி எஸ். ட்ரூமன், 7-வதாக விட் ஈசன்ஹேவரை தேர்வு செய்தனர்.

ஆனால், தற்போதைய அதிபர் டிரம்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி, அவருக்கு 44-வது இடமான, கடைசி இடத்தையும் அளித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு 8-ம் இடத்தில் இருந்த முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்த முறை 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

கடந்த 2014ம் ஆண்டில், 18-ம் இடத்தில் இருந்த பாரக் ஒபாமா 10 இடங்கள் முன்னேறி 8-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

ஜார்ஷ் புஷ் 35ம்இடத்தில் இருந்து 30-ம் இடத்துக்கும், இவரின் தந்தை ஜார்ஜ் எச்.டபில்யு. புஷ் 17-வது இடத்திலும் ரீகன் 9-ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

சிறந்த 5 அதிபர்கள்:

1. ஆபிரஹாம் லிங்கன்

2. ஜார்ஜ் வாஷிங்டன்

3. பிராங்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்

4. தியோடர் ரூஸ்வெல்ட்

5. தாமஸ் ஜெபர்சன்

கடைசி 5 அதிபர்கள்:

1. டொனால்ட் டிரம்ப்

2. ஜேம்ஸ் புக்காணன்

3. வில்லியம் ஹென்றி ஹாரிசன்

4. பிராங்க்ளின் பியர்ஸ்

5. ஆன்ட்ரூ ஜான்சன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x