Published : 28 Jan 2018 07:23 AM
Last Updated : 28 Jan 2018 07:23 AM

உலக மசாலா: வரலாற்றுச் சின்னமாகுமா எஞ்சிய சுவர்?

ஜெர்மனியில் இருந்த பெர்லின் சுவர் 1989-ம் ஆண்டு உடைக்கப்பட்டது. 80 மீட்டர் நீளமுள்ள சுவரின் ஒரு பகுதியைத் தற்போது 37 வயது கிறிஸ்டியன் போர்மன் என்ற வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்திருக்கிறார். பான்கோவ் மாவட்டத்தில் 2 ரயில் நிறுத்தங்களுக்கு இடையே இந்தச் சுவர் இருக்கிறது. உள்ளூர் அரசாங்கத்துக்கு இந்தச் சுவர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. அரசாங்க ஏடுகளில் சுவர் இடிக்கப்பட்டதாகப் பதிவாகியிருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு முன்பே தான் கண்டுபிடித்த இந்தச் சுவர் பற்றி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகவே வைத்திருந்தார் போர்மன். சமீபத்தில் சுவரைப் பார்த்தபோது, புயலால் மிகவும் மோசடைந்திருப்பதைக் கண்டார். உடனே தன்னுடைய வலைப்பூவில், தான் கண்டுபிடித்த சுவரின் ஒரு பகுதி குறித்து எழுதினார். இந்தச் சுவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இதை வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் இதை இடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். “நான் நீண்ட காலத்துக்கு முன்பே இந்தச் சுவரைக் கண்டுபிடித்தாலும் அது பெர்லின் சுவர்தானா என்பதை உறுதிப்படுத்தவும் இடித்துவிடுவார்கள் என்று பயந்ததாலும் யாரிடமும் சொல்லவில்லை. 1961-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தச் சுவர் ஜெர்மனியர்களைப் பிரித்திருந்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சுவர் இடிக்கப்பட்டது. சுமார் 140 கி.மீ. நீளமிருந்த இந்தச் சுவரை இடித்து தரைமட்டமாக்கிவிட்டதாகத்தான் மக்களும் அரசாங்கமும் நினைத்திருந்தனர். ஆனால் 80 மீட்டர் சுவர் மட்டும் இன்னும் எஞ்சியிருக்கிறது. சுவர் பற்றிய கோபம் எல்லோருக்கும் மறைந்திருக்கும் என்பதாலும் சுவர் மோசமான நிலைக்குச் செல்வதாலும் இந்த விஷயத்தை வெளியே சொல்லியிருக்கிறேன். இதை ஒரு வரலாற்றுச் சின்னமாக மாற்ற வேண்டும்” என்கிறார் போர்மன்.

வரலாற்றுச் சின்னமாகுமா எஞ்சிய சுவர்?

போல

ந்தில் கிராமத்துப் பண்ணையில் வசித்த இளம் பசு, அருகில் இருந்த காட்டுக்குத் தப்பிச் சென்றது. காட்டெருமைக் கூட்டத்துடன் சேர்ந்து 3 மாதங்களாக வாழ்கிறது. “நான் ஆராய்ச்சிக்காகக் காடுகளில் சுற்றி வருவேன். ஒரு காட்டெருமைக் கூட்டத்தில் வித்தியாசமான உருவத்தைக் கண்டேன். அது பழுப்பு வண்ணப் பசு மாடு என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். காட்டெருமைகளுடன் சேர்ந்து வாழாது பசு. காடுகளில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு, மோசமான வானிலையைச் சமாளித்து சுதந்திரமாக வாழ்கிறது. காட்டெருமைகளுக்குக் குளிரைச் சமாளிக்க அடர்த்தியான ரோமங்கள் இருக்கின்றன. ஆனால் பசு எப்படிச் சமாளிக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை காட்டெருமையுடன் இணை சேர்ந்தால் பசுவின் உயிருக்கே ஆபத்து. கலப்பினக் குட்டி உருவத்தில் பெரியதாக இருக்கும். அதனால் கன்று ஈனும்போது பசு உயிரைவிட நேரிடும். அதற்குள் பசுவை மீட்க வேண்டும். இது எளிதான விஷயம் இல்லை. குளிர்காலம் முடிந்தால், காட்டெருமைகள் காட்டுக்குள் சென்றுவிடும். அப்படிச் சென்றால் பசுவை மீட்கவே இயலாது” என்கிறார் விலங்குகள் ஆராய்ச்சி மைய இயக்குனர் கோவால்ஸிக்.

சுதந்திரத்துக்காகக் கடினமான வாழ்க்கை மேற்கொள்ளும் பசு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x