Published : 27 Jan 2018 05:23 PM
Last Updated : 27 Jan 2018 05:23 PM

ஜப்பான் கிரிப்ட்டோகரன்ஸி நிறுவனத்தை ஹேக் செய்த கொள்ளையர்கள்: ரூ.3,500 கோடி திருட்டு

 ஜப்பானில் டோக்கியோ நகரில் உள்ள கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனை நிலையம் 'ஹேக்' செய்யப்பட்டு, 3,500 கோடி ரூபாய் அளவிற்கு திருடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸிகள் சமீபகாலமாக பிரபலமடைந்து வருகின்றன. இது, ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம். சில நாடுகள் இதனை அங்கீகரித்துள்ள போதிலும், இந்தியாவில் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதை மத்திய ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகமும் தெளிவுபடுத்தியுள்ளன. மேலும், க்ரிப்டோகரன்ஸி முறைகள் எந்த அரசையும் சார்ந்து இருப்பதில்லை. மாறாக அது ரகசியமான வழிமுறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, ஆன்லைன் முறைகளிலும், வாட்ஸ் அப் போன்ற குழுக்களின் மூலமாகவும் புழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில் ஜப்பானில் புழக்கத்தில் உள்ள கிரிப்ட்டோகரன்ஸியான காயின்செக் பரிவர்த்தனை நிலையத்தை இண்டர்நெட் 'ஹேக்கர்கள்' ஹேக் செய்துள்ளனர். இதன் மூலம், சுமார் 3,500 கோடி ரூபாய் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிரிப்ட்டோகன்ஸி பரிவர்த்தனை நிலையம் சார்பில் அந்நாட்டு நிதியமைச்சகத்திற்கு, பண கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

785 க்ரிப்டோகரன்ஸி முறைகள் உலகம் முழுக்க நடைமுறையில் உள்ளன. ஜப்பானைச் சேர்ந்த எம்டி.கோக்ஸ் 2014-ம் ஆண்டில் உலக அளவில் 80 சதவீத பிட்காயின்களை கையாண்டு வந்தது. மொத்தம் 3,350 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின்களை இழந்ததால் திவாலானதாக அந்நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x