Published : 29 Jan 2018 01:39 PM
Last Updated : 29 Jan 2018 01:39 PM

புதினுக்கு எதிராக பேரணி: சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்

அதிபர் தேர்தலை புறக்கணிப்பு, பேரணியை தலைமை ஏற்று நடத்திய ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னியை போலீஸார் சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அந்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும், புதினுக்கு கடும் போட்டியாளராகவும் கருதப்பட்ட அலெக்ஸி நவால்னி போட்டியிடத் அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்த தடை குறித்து அலெக்ஸி, "புதினுக்கு அவரது தலைமையிலான ஆட்சிக்கு நாட்டில் ஆதரவு அலை இல்லை. இதில் அரசியல் உள் நோக்கம் உள்ளது. ரஷ்யாவின் உண்மை நிலைமையை நான் வெளிக்கொண்டு வந்ததாலேயே நான் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள தேர்ந்தலை புறக்கணிக்குமாறு எனது ஆதரவாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.விரைவில் இது தொடர்பாக போராட்டம் நடைபெறும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பான பேரணியை அலெக்ஸி தனது ஆதரவாளர்களுடன் நடத்தினார். அப்போது பேரணியில் எதிர்பாராதவிதமாக நுழைந்த ரஷ்ய போலீஸார் அலெக்ஸியை பிடித்து இழுத்து சென்றனர். அவர்களுடன் செல்ல மறுத்த அலெக்ஸி தரையில் விழுகிறார் இருப்பினும் போலீஸார் அலெக்ஸியை தரதரவென இழுந்து செல்கின்றனர். இந்த வீடியோ காட்சி ரஷ்யாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரால் கைது செய்யப்பட்ட அலெக்ஸி பின் விடுவிக்கப்பட்டார்.

கைது குறித்து அலெக்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்களில் பலர் உள்ளபோது ஒருவரை மட்டும் கைது செய்தது அர்த்தமற்றது. ஒருவர் வருவார். எனது இடத்தை நிரப்புவார்" என்று பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் தற்போதைய அதிபராக உள்ள விளாடிமிர் புதின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி வகித்துள்ளார். மேலும் தொடர்ந்து நான்காவது முறையாக புதின் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

புதினுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நாவல்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x